இன்று தேர்தல்.. ஆனா ரிஷி சுனக்கால் பிரதமர் பதவி மட்டுமின்றி.. எம்பி பதவியை கூட தக்கவைக்க முடியாதாம்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், ரிஷி சுனக் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த 2015ம் ஆண்டு முதலே ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் எம்பியாக இருக்கும் நிலையில், அந்த தொகுதியைக் கூட அவரால் தக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டன் நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

தேர்தல்: இதற்கிடையே இந்த பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரிஷி சுனக் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். அங்குக் கடந்த 2019இல் நடந்த தேர்தலில் ரிஷி சுனக் 63% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2015ம் ஆண்டு முதலே ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் ரிஷி சுனக் தான் எம்பியாக இருந்து வருகிறார்.
ஆனால், இந்த முறை ரிஷி சுனக் இந்த தொகுதியிலேயே தோல்வி அடையும் சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் நடந்த சர்வே முடிவுகளில் கூட ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. அங்கு ரிஷி சுனக்கிற்கு 50% வாக்குகளும், தொழிலாளர் கட்சிக்கு 47% வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.
ரிஷி சுனக் படுதோல்வி: ரிஷி சுனக் தனது எம்பி தொகுதியைத் தக்க வைக்க முடியாமல் போனால் அது அவருக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும். ஏனென்றால், பிரிட்டன் வரலாற்றில் இதுவரை பிரதமர் ஒருவர் தனது எம்பி சீட்டில் தோல்வி அடைந்ததே இல்லை. எனவே, இந்த முறை அங்கு ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதி முடிவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த மாதம் அங்கு Savanta and Electoral Calculus என்ற அமைப்பின் பிரம்மாண்ட சர்வே முடிவுகள் வெளியானது. அங்குள்ள 516 இடங்களில் தொழிலாளர் கட்சி 382இல் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது. அதாவது சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 53 சீட்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. நவீன பிரிட்டன் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய தோல்வியாக இது இருக்கும்.
என்ன காரணம்: குறிப்பாக ரிஷி சுனக் தனது எம்பி பதவியை இழக்கக்கூடும் எனக் கூறப்பட்டு இருந்தது. ரிஷி சுனக் போட்டியிடும் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் இந்துக்கள் மக்கள் தொகை பெரியளவில் இல்லை. அங்கு வெள்ளை இன மக்களே அதிகமாக உள்ளனர். கடந்த 2015இல் ரிஷி சுனக் முதலில் போட்டியிட்ட போது அங்கு எம்பியாக இருந்த கன்சர்வேடிவ் கட்சி எம்பி ஆதரவு முழுமையாக ரிஷி சுனக்கிற்கு இருந்தது.
உறுதி: இதன் காரணமாகவே அங்கிருந்த வெள்ளை இன மக்கள் ரிஷி சுனக்கிற்கு வாக்களித்தனர். இருப்பினும், இந்த முறை மோசமான பொருளாதார சூழல் காரணமாக அவர்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவே தெரிகிறது. வெள்ளை இன மக்களும் பாரம்பரியமாகவே கன்சர்வேடிவ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். ஆனால், இந்த முறை அதிருப்தி அதிகமாக இருப்பதால் அவர்கள் தொழிலாளர் கட்சி பக்கம் சாய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதனால் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications