ரூ11 கோடி பரிசு அடித்த லாட்டரி டிக்கெட்! 4 மாதமாக ரிசல்ட் பார்க்காதவருக்கு காத்திருந்த மெகா ட்விஸ்ட்
லண்டன்: லாட்டரி சீட்டை வாங்கினால் மட்டும் பத்தாது, ரிசல்ட் வரும் வரை வாங்கிய லாட்டரி சீட்டை பத்திரமாக வைக்க வேண்டும் என்பதற்காக சிலர் செய்யும் செயல்கள் கவுண்டமனி செந்தில் காமெடியை மிஞ்சும் அளவுக்கு இருந்துவிடும். அப்படித்தான் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒரு நிகழ்வு நடைபெற்று இருக்கிறது.
லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை வாங்கும் போதே குலுக்கல் நடைபெறும் தேதியையும் குறித்து வைத்துக்கொள்வார்கள். அதன் பிறகு தினமும் குலுக்கல் நடைபெறும் நாளை மனதில் நினைத்துக்கொண்டு நமக்கு லாட்டரியில் பரிசு விழுந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என பகல் கனவு கண்டு கொண்டு இருப்பதை பார்க்க முடியும்.

லாட்டரி சீட்டு
அதிலும் பம்பர் பரிசு டிக்கெட்டுகள் என்றால் குலுக்கல் நாள் எப்போது வரும் என்று ஏக்கத்துடன் அந்த நாளை எதிபார்த்துக்கொண்டு இருப்பதை பார்க்க முடியும். இன்னும் சிலரோ லாட்டரியை வாங்கிய உடன் கண்ணில் படும் படியான இடத்தில் வைத்துக் கொண்டு அடிக்கடி பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இது ஒரு ரகம் என்றால், படத்தில் கவுண்டமனி மனைவியிடம் பத்திரமாக கொடுத்து வைத்து விட்டு பரிசு விழுந்நதும் டிக்கெட்டை போய் கேட்பாரே.. அதே போல சிலர் வீட்டில் பத்திரமாக கொடுத்து வைப்பார்கள்.
சிலர் லாட்டரியை வைத்த இடத்தை கூட மறந்து விட்டு பரிசு விழுந்த பிறகு தேடிக்கொண்டு இருப்பார்கள். பரிசு அடித்தும் லாட்டரி டிக்கெட்டை தொலைத்து விட்டு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று அழுது புலம்பும் செய்திகள் கூட கேள்வி பட்டு இருப்போம். இப்படி லாட்டரியில் பரிசு அடித்த நிகழ்வை விட அதை சிலர் வாங்க பட்ட பாடு குறித்த சுவாரசிய செய்திகள் வெளியாகும். இங்கிலாந்தில் கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிகழ்வுதான் நடைபெற்று இருக்கிறது. இது குறித்த விவரங்கள் வருமாறு:-
பெட்டியில் பூட்டி வைக்கப்பட்ட லாட்டரி சீட்டு
இங்கிலாந்தின் வேல்ஸ் நகரம் அருகே ஸ்வன்சே என்ற பகுதியை சேர்ந்தவர் டேரன் பர்ஃபிட். இவருக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருக்கிறது. அங்குள்ள நேஷனல் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் இவருக்கு பெரிதாக பரிசு அடித்தது இல்லையாம். ஆனாலும் எப்பவாது நமக்கு அதிர்ஷ்டம் அடிக்காமலா போகும் என்ற ஆசையில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்து இருக்கிறார்.
இப்படி வாங்கும் லாட்டரி டிக்கெட்டுகளை தனது கார் டேஷ் போர்டில் இருக்கும் பெட்டியில் போட்டு இருக்கிறார். அப்படித்தான் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கி அந்த பெட்டியில் போட்டு இருக்கிறார். ஆனால் குலுக்கல் தேதி முடிந்த பிறகும் அதை செக் செய்யாமல் விட்டுவிட்டார். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து காரில் செல்லும் போது அவரது மகன், சாப்பிடுவதற்கு பண்டம் கேட்டு இருக்கிறான். மகனுக்காக டேஷ் போர்டு லாக்கரில் எப்போதும் நொறுக்குத்தீனிகளை போட்டு வைத்து இருக்கும் டேரன் பர்ஃபிட் அதை எடுக்க திறந்து இருக்கிறார்.
லக்கி பாஸ்கர் துல்கர் சல்மான் போல
அப்போது அவர் கையில் எதேச்சையாக நேஷனல் லாட்டரி சிக்கியுள்ளது. அப்போதுதான் 11 கோடி பரிசு வென்றவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லாட்டரி நிறுவனம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்து இருக்கிறது. உடனே வீட்டுக்கு போன உடன், தன்னிடம் இருந்த லாட்டரி டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து பார்த்து இருக்கிறார். அதில் ஒரு டிக்கெட்டிற்கு 11 கோடி பரிசு விழுந்துள்ளது. இதைப்பார்த்ததும் லக்கி பாஸ்கர் துல்கர் சல்மான் போல வீட்டில் உள்ளவர்கள் அச்சப்படும் அளவுக்கு சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து இருக்கிறார்.
தற்போது வரை பரிசு அடித்தது இருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என மகிழ்ச்சியுடன் சொல்லி கொண்டு இருக்கிறார் டேரன் பர்ஃபிட். ஸ்வன்சேவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் பசுமை புல்வெளி பராமரிப்பாளராக இருக்கும் டேரன் பர்ஃபிட்டிற்கு அதிர்ஷ்ட தேவதையின் ஆசி ரொம்ப பலமாக உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications