"வரலாறு உங்களை மன்னிக்காது!" ரிஷி சுனக்கிற்கு சொந்த கட்சியில் எழுந்த மாபெரும் எதிர்ப்பு! ரொம்ப மோசம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மீது அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரே சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கனவே, பல பிரச்சினைகளை ரிஷி சுனக் சந்தித்து வரும் நிலையில், சொந்த கட்சி எம்பியின் இந்தக் குற்றச்சாட்டு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் நாட்டின் பிரதமராக இப்போது ரிஷி சுனக் இருக்கிறார். கடந்தாண்டு வெறும் ஓரிரு மாதத்தில் இரண்டு பிரதமர்கள் அடுத்தடுத்து விலகிய நிலையில், இக்கட்டான சூழலில் பிரதமர் பொறுப்பிற்கு வந்திருந்தார் ரிஷி சுனக். அந்நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 UK MPs Resignation Letter To Rishi Sunak says History Will Not Judge You Kindly

இருப்பினும், அவரது சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் ரிஷி சுனக் மீது பலரும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கன்சர்வேடிவ் கட்சியில் இருக்கும் பல்வேறு தலைவர்களும் வெளிப்படையாகவே கூட ரிஷி சுனக்கிற்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ரிஷி சுனக்: இதற்கிடையே இப்போது அங்குள்ள எம்பி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் பிரதமர் ரிஷி சுனக்கை சரமாரியாக விமர்சித்துள்ளார். அந்நாட்டின் முன்னாள் கலாச்சார துறை அமைச்சராக இருந்த நாடின் டோரிஸ் தான் இப்போது சரமாரியாக சுனக்கை விமர்சித்துள்ளார். நாடின் டோரிஸ் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டோரிஸ் தனது ராஜினாமா கடிதத்தில், பிரதமர் ரிஷி சுனக் பழமைவாதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டதாகச் சாடியுள்ளார். மேலும், வரலாறு உங்களைக் கனிவாக மதிப்பிடாது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தன் மீதான அச்சுறுத்தல்களுக்கு சுனக் தான் காரணம் எனச் சாடியுள்ளார். மேலும், இதனால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டதாகவும் அடிக்கடி போலீசாரும் கூட தனது வீட்டிற்கு வந்து தனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதிருப்தி: அவர் தனது கடிதத்தில், "ஒரு நபரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்குவது ரொம்பவே மலிவானது.. உங்கள் அரசு எந்தளவுக்குச் சென்றுவிட்டது என்பதையே இது காட்டுகிறது. நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு பதவியேற்றதிலிருந்து, நாடு ஒரு ஜாம்பி நாடாளுமன்றத்தால் வழிநடத்தப்படுகிறது.. அங்கு அர்த்தமுள்ள எதுவும் நடக்கவில்லை. உங்களுக்கு மக்களிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை.. அரசு தள்ளாடுகிறது" என்று அவர் கூறியிருந்தார்.

ரிஷி சுனிக் மோசமாக நாட்டை வழிநடத்துவதாகத் தெரிவித்த அவர், இதனால் நாடு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சாடினார். மேலும், "வரலாறு நிச்சயம் உங்களைக் கனிவாக மதிப்பிடாது" என்றும் கடுமையான கருத்துகளை அவர் முன்வைத்துள்ளார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் ரிஷி சுனக் மீதான அதிருப்தி அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சரமாரி அட்டாக்: அந்நாட்டில் பொதுவாகப் பிரதமர் பதவியை ஒருவர் விடும்போது, கவுரவ எம்பிக்கள் எனச் சிலரை நியமிப்பார்கள். அப்படி போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போது, அவர் சிலரைக் கவுரவ எம்பிக்களாக நியமித்தார்.

அப்போது அந்தப் பட்டியலில் நாடின் டோரிஸ் பெயரும் இடம்பெற்று இருந்ததாகவும் இருப்பினும், அதனை ரிஷி சுனக் தலையிட்டு நீக்கியதாகவும் நாடின் டோரிஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ரிஷி சுனக் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+