இந்துக்களே மன்னித்து விடுங்கள்.. தீபாவளிக்கு மாமிசம் - பீர் கொடுத்த பிரிட்டன் பிரதமர் வருத்தம்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடந்த தீபாவளி பண்டிகை பீர் மற்றும் மாமிசம் பரிமாறப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தான் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அலுவலகம் மன்னிப்பு கோரியு்ளளது.
பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் செயல்பட்டு வருகிறார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த அந்த நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரிட்டன் பிரதமாக இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏறினார்.

பொதுவாக அமெரிக்காவை போல் பிரிட்டனிலும் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் நம் நாட்டை போலவே இந்து மதத்தை பின்பற்றி வருகின்றனர். இதனால் பிரிட்டனிலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் தீபாவளி பண்டிகை என்பது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் தீபாவளி கொண்டாடினர். அதேபோல் பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் வைத்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்டார் கெய்மர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
பிரிட்டன் பிரதமர் அலுவலக தீபாவளி கொண்டாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பிரதமர் ஸ்டார் கெய்மர் விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இந்த விழாவுக்கு ஏராளமான இந்துக்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்து மதத்தை சேர்ந்த பிரிட்டன் எம்பிக்களுக்கும் பங்கேற்றனர். அப்போது விழாவில் மாமிசம் மற்றும் பீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்து மத எம்பிக்கள் கவலை தெரிவித்தனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சிவானி ராஜா எம்பி சார்பில் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் தீபாவளி பண்டிகை என்பது பல்வேறு இந்துக்களின் பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டதாக இருந்தது. இந்த ஆண்டு நடந்த தீபாவளி கொண்டாட்டம் என்பது ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. எனது சொந்தத் தொகுதியான லெய்செஸ்டர் கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் உள்ளனர். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக நான் வருத்தமடைகிறேன்'' என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் தீபாவளி கொண்டாட்டத்தில் வினியோகம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் அங்கு நடந்த சம்பவம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் இனி இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்று பிரிட்டன் பிரதமர் உத்தரவாதம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications