Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டன் ரோடுகள் எங்கும் "குட்கா" கறை.. இந்தியர்கள் மீது எழுந்த விமர்சனம்! நிலைமை எல்லை மீறுதாம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இப்போது பல முக்கிய தெருக்களில் பான் கறை பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. அங்குப் பல முக்கிய இடங்களில் குப்பைத் தொட்டிகள், சாலைகளில் பான் கறை இருக்கிறதாம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், பிரிட்டன் வாழ் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படி அதிகப்படியான வெளிநாட்டினர் செல்லும் நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் இருக்கிறது. பல தரப்பட்ட மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரிட்டனுக்குச் செல்கிறார்கள். ஐடி முதல் வீட்டு உதவியாளர் வரை அனைத்து தரப்பு வேலைக்காகவும் இந்தியர்கள் அங்கு செல்கிறார்கள்.

UK Sees Surge in Paan Spitting Video of Stained London Harrow Streets Sparks Outrage

பான் கறைகள்

இதற்கிடையே பிரிட்டனில் திடீரென சமூக வலைத்தளங்களில் காட்டமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது அங்கு லண்டனில் பல்வேறு தெருக்களில் வெற்றிலை மற்றும் புகையிலை எச்சில் கறைகள் உள்ள வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டானது. ரேனர்ஸ் லேன் முதல் நார்த் ஹாரோ வரை பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள், நடைபாதைகள், சாலைகள் என எங்குப் பார்த்தாலும் அடர் சிவப்பு நிறக் கறைகள் படர்ந்துள்ளன.

இணையத்தில் எழுந்த விமர்சனம்

குறிப்பாக வெற்றிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு வெளியே இந்தக் கறைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நார்த் ஹாரோவில் புதிதாக வெற்றிலைக் கடை திறக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராகவும் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கடை திறக்கப்பட்டால் இந்த பகுதி முழுக்க மக்கள் எச்சில் துப்ப ஆரம்பித்துவிடுவார்கள் என்று பலரும் கவலை எழுப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இதற்கு இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களே காரணம் என்று பிரிட்டன் நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.

வேறு யாரும் தேவையில்லை

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "குஜராத்திகள், பஞ்சாபிகள், கோவா மக்கள் அனைவரும் சிக்கலையே தருகிறார்கள். ட்ரம்ப் விரைவில் இங்கிலாந்தை ஆள வேண்டும் என நினைக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். மற்றொருவர், "இந்தியாவின் பிம்பத்தை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. நம் ஆட்களே உலகம் முழுவதும் சென்று இதற்கான வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

"இந்திய பாஸ்போர்ட் அதன் கண்ணியத்தை இழப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று" என்று மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார். அதேபோல இன்னொருவர், "ஒரு காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தனர்.. இப்போது இந்தியர்கள் பிரிட்டனை ஆக்கிரமிக்கிறார்கள்" என்றும் பதிவிட்டுள்ளார். இதுபோல ஏகப்பட்ட ட்வீட்களை பார்க்க முடிகிறது.

முதல்முறை இல்லை

அதேநேரம் பிரிட்டனில் இதுபோல ஏற்படுவது இது முதல்முறை இல்லை. 2019ம் ஆண்டும் இந்த விவகாரம் பெரிதாக எழுந்தது. அப்போது லெய்செஸ்டர் நகர காவல்துறையினர் ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் இது தொடர்பாக போஸ்டர் ஒட்டும் அளவுக்கு நிலைமை மோசமானது. அப்போது போலீசார், "தெருவில் வெற்றிலை துப்புவது சுகாதாரமற்றது மற்றும் சமூக விரோதமானது. இதற்கு அபராதம் விதிக்கப்படும்" என போஸ்டர் ஒட்டி இந்திய மதிப்பில் ரூ.12,525 அபராதம் விதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

இந்த கறைகளைச் சுத்தம் செய்ய ஆகும் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம். கடந்த 2014ம் ஆண்டிலேயே இந்த பான் கறைகளைச் சுத்தம் செய்ய 20,000 பவுண்டுகள் (ரூ. 21 லட்சம்) செலவிட்டதாக பிரெண்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்தே வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+