சிவப்பு கவுன் சிறுமி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் உலா.. அலறியடித்து ஓடிய நர்ஸுகள்.. செம ட்விஸ்ட்
லண்டன்: இங்கிலாந்தின் நார்விச் நகரில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம், ஏதோ சினிமா படம் போல இருந்தாலும், நிஜமாகவே நடந்துள்ளது.. மொத்த பேரும் ஆடிப்போய் கிடக்கிறார்களாம்.. இருந்தாலும், அந்த உருவங்கள் உண்மையிலேயே என்ன? அதென்ன கற்பனையா? வேறு ஏதாவது காரணமா? எதுவுமே இதுவரை வழங்கப்படவில்லை. என்ன நடந்தது? இந்த சம்பவம் அறிவியல் உலகத்திலும் ஆன்மீக உலகத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் 'பிரிசில்லா பேகன் லாட்ஜ்' என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.. குணப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளைகூட, இந்த மருத்துவமனையில் பெரும்பாலும் குணமாக்கி விடுவார்களாம்..

சிவப்பு கவுன் சிறுமி
இந்நிலையில், நடு ராத்திரிகளில் யாரோ ஒரு சிறுமி சிவப்பு நிற கவுன் அணிந்து மருத்துவமனை தாழ்வாரங்களில் தனியாக உலா வருவதாக அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் கூறுகிறார்கள்..
கடந்த சில மாதங்களாகவே, இப்படியொரு மர்ம உருவத்தை அவர்கள் நேரில் பார்த்து வருகிறார்களாம்.. அதனால் நைட் நேரத்தில் தனியாக வேலை செய்யவே பயமாக இருக்கிறது என்று சொல்லி பலரும் டியூட்டிக்கு வருவதற்கு தயக்கம் காட்டி உள்ளனர்..
ஊழியர்கள் பலரும் இதே புகாரை சொன்னதால், மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரிய தலைவலி ஏற்பட்டது.. இதனால் அந்த சிறுமி யார் என்றும் விசாரித்துள்ளார்கள்..
அரசு மருத்துவமனை
அப்போதுதான், ஒரு பழைய கதையை அங்கிருப்பவர்கள் சொன்னார்கள்.. அதாவது இதே இடத்தில் 1970-களில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை இருந்ததாம். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுமி இறந்துவிட்டதாகவும், அவளது ஆவிதான் இப்போதும் அந்த இடத்தை விட்டுப் போகாமல் சுற்றி வருவதாகவும் அங்குள்ளவர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்..
இந்த பிளாஷ்பேக் சம்பவத்தை கேட்ட மருத்துவமனை நிர்வாகம், பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த ஊழியர்களுக்கு தைரியம் கொடுக்க, ஒரு விசித்திரமான முடிவை எடுத்தது... அதன்படி ஊழியர்களின் மன அமைதிக்காக பாதிரியார்களை வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் சர்ச்சில் இருந்து "புனித எண்ணெய்" கொண்டு வரப்பட்டது.
இங்கிலாந்து பாதிரியார்கள்
சிறப்பு பாதிரியார்கள் மருத்துவமனைக்கு வந்து, பிரார்த்தனைகள் செய்து, அந்தப் புனித எண்ணெய்யை அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் தெளித்து சுத்திகரிப்பு சடங்குகளை நடத்தியிருக்கிறார்கள்..
ஆரம்பத்தில் இப்படி ஒரு சடங்கு நடந்ததையே மருத்துவமனை நிர்வாகம் மறைத்துவிட்டது.. பிறகுதான் ஊழியர்களின் மனநலனுக்காகவும், அவர்கள் நிம்மதியாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான் இப்படியான சடங்கை நடத்தியதாக ஒப்புக்கொண்டது. இங்கிலாந்து சட்டப்படி இது போன்ற சடங்குகளை செய்ய ஒரு மனநல மருத்துவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதால், அதையும் அவர்கள் முறைப்படியே செய்திருந்தனர்.
ரெட் கலர் டிரஸ்
சமீபத்தில் இந்த மருத்துவமனை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு, அதன் திறப்பு விழாவில் மன்னர் சார்லஸ் கூட கலந்துகொண்டார். ஆனாலும், பழைய கட்டிடத்தில் வேலை செய்தவர்களுக்கு அந்த "சிவப்பு உடை சிறுமி" தந்த பயம் இன்னும் குறையவில்லை. அது நிஜமாகவே பேயா அல்லது அதிக வேலையினால் அவர்களுக்கு ஏற்பட்ட கற்பனையா என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது...
இந்த சம்பவம் அறிவியல் உலகத்திலும் ஆன்மீக உலகத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வலம் வந்தபடி உள்ளன.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications