Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஷட் அப்".. இங்கிலாந்து வீரரிடம் கத்திய கோலி.. சண்டையை விடுங்க.. அதுக்கு அப்பறம் நடந்த ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இன்று இங்கிலாந்து இந்தியா இடையிலான போட்டியில் கோலி - பிரைஸ்டோ இடையே மோதல் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து இந்தியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதன்பின் கொரோனா காரணமாக 5வது டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

எங்கே நடக்கிறது?

எங்கே நடக்கிறது?

தற்போது ஐபிஎல்லுக்கு பின்பாக மீண்டும் 5வது டெஸ்ட் போட்டி எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பும்ரா கேப்டனாக வகிக்கும் இந்த போட்டியில் பண்ட், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 111 பந்துகளில் 131.53 ஸ்டிரைக் ரேட்டில் 146 ரன்களை பண்ட் எடுத்தார். அதேபோல் ஜடேஜா 104 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த பும்ரா வெறும் 16 பந்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 31 ரன்கள் எடுத்து அசத்தினார்.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

இதனால் முதல் இன்னிங்சில் இந்தியா மொத்தமாக 416 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன்பின் இறங்கிய இங்கிலாந்து அணி நேற்றே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த 84 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஆட்ட நாள் முடிவில் பிரைஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்தனர். பும்ரா மட்டும் நேற்று 3 விக்கெட் எடுத்திருந்தார். நேற்று போட்டியிலேயே கோலி - பிரைஸ்டோ இடையில் மோதல் வந்தது.

பிரைஸ்டோ

பிரைஸ்டோ

நேற்று போட்டியில் பிரைஸ்டோ கொஞ்சம் திணறிய போது டிம் சவுதி பெயரை இழுத்து கோலி அவரை கிண்டல் செய்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டிம் ஓவரில் பிரைஸ்டோ அதிகமாக திணறினார். அதை குறிப்பிட்டு கோலி கிண்டல் செய்தார். அதோடு நேற்று ஆட்ட நேர முடிவில் எல்லோரும் திரும்பி செல்லும் போதும் பிரைஸ்டோவிடம் அருகில் சென்று தோளில் கைபோட்டு கோலி அவரை கிண்டல் செய்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இன்றும் இதேபோல் பிரைஸ்டோவை கோலி ஸ்லெட்ஜ் செய்தார். போக போக சூடான பிரைஸ்டோ கோபம் அடைந்து கோலியை பார்த்து ஏதோ கத்தினார். இதற்கு கோலியும் பதிலுக்கு கோபமாக கத்தினார். இதனால் அங்கு மைதானம் மழை கால வானிலைக்கு இடையிலும் சூடானது. இதையடுத்து நடுவர் வந்து சமாதானம் செய்ய முயன்றார். பிரைஸ்டோவை பார்த்து கோலி கோபமாக ஷட் அப் என்று கூறி பேட்டிங் மட்டும் செய் என்றார்.

பதிலடி

பதிலடி

இதனால் மைதானத்தில் கொஞ்சம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அதன்பின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோலியிடம் வந்து ஏதோ பேசினார். கோலி தோள் மீது கையை போட்டு ஏதோ சொன்னார். இதன் பின்னர் கோலி சாந்தம் அடைந்தார். அதோடு பிரைஸ்டோ அருகே சென்று அவர் மீது நட்பாக ஒரு குத்து விட்டார். மேலும் சிரித்துக்கொண்டே சமாதானம் ஆகிவிட்டு அங்கிருந்து சென்றார். மைதானத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+