Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.100 கோடி வருவாய்! ஆனாலும் ஒரு பைசா கூட வரி செலுத்தவில்லை! ரிஷி சுனக் மனைவி அக்ஷதா தப்பியது எப்படி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வாகி உள்ள ரிஷி சுனக் மனைவி அக்ஷதா சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை ஒன்றில் சிக்கினார்.

பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். லிஸ் டிரஸ் வெறும் 45 நாட்களில் பதவி விலகிய நிலையில், புதிய பிரதமரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்தது.

ரிஷி சுனக் தவிர வேறு யாருக்கும் தேவையான எம்பிக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ரிஷி சுனக் போட்டியின்றி பிரிட்டன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

 லிஸ் டிரஸ் ராஜினாமா

லிஸ் டிரஸ் ராஜினாமா

கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டன் பார்க்கும் 5ஆவது பிரதமர் ரிஷி சுகன் ஆவார். குறிப்பாகக் கடந்த சில மாதங்களில் மட்டும் போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் ராஜினாமா செய்து உள்ளனர். பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி பிளவுபட்ட ஒரு கட்சியாகவே பார்க்கப்படுகிறது. அக்கட்சியைத் தலைமை தாங்குவது என்பது சவாலான ஒரு காரியம் தான். அதை ரிஷி சுனக் எப்படிச் செய்வார் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

 ரிஷி சுனக் மனைவி

ரிஷி சுனக் மனைவி

ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை தான் இவர் திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமணம் கடந்த 2009இல் நடைபெற்றது. இவர்களுக்குக் கிருஷ்ணா சுனக், அனுஷ்கா சுனக் என்று இரு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்ஷதா மூர்த்தி உரிய வருமான வரியைச் செலுத்தவில்லை என்று சர்ச்சை எழுந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

 நான்-டோமிசைல் என்றால் என்ன

நான்-டோமிசைல் என்றால் என்ன

அக்ஷதா இப்போது பிரிட்டனில் வாழ்ந்தாலும் அவர் நான்-டோமிசைல் (Non-domicile) என்ற வரி நிலையில் தான் இருக்கிறார். இந்த முறையில் ஒருவர் பிரிட்டன் தாண்டி வெளிநாட்டில் பிறந்தவர் அல்லது அவர்களின் பெற்றோர் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர் என்றால், அவர்கள் இங்கிலாந்தில் ஈட்டும் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்தினால் போதும்.. பிரிட்டனின் அனைத்து சலுகைகளையும் பெற்றாலும் அவர்கள் வெளிநாடுகளில் ஈட்டும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை.

 வரி செலுத்தவில்லை

வரி செலுத்தவில்லை

அதாவது அவர் வெளிநாடுகளில் சம்பாதித்த வருமானத்திற்கு இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக வரி செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் வருமானம் ஈட்டும் சொந்த நாட்டில் வருமான வரி கட்ட வேண்டும் என்பதால் இந்த நடைமுறையைக் கொண்டு வந்தார்கள். இருப்பினும், சில முறைகளைப் பின்பற்றி குறைந்தபட்ச அல்லது வரியை முற்றிலும் செலுத்தாமல் கூட சிலர் இருப்பாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதே புகார் தான் ரிஷியின் மனைவி அக்ஷதா மீதும் முன்வைக்கப்பட்டது.

 ரிஷி சுனக் விளக்கம்

ரிஷி சுனக் விளக்கம்

ரிஷி சுனக் கடைசி வரை இதில் தனது மனைவிக்கு ஆதரவாகவே இருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனது மனைவி தனது நாட்டை நேசிக்கிறார்.. அவரது பெற்றோரைப் பார்த்துக் கொள்ளக் கடைசிக் காலத்தில் கண்டிப்பாக அவர் அங்குத் திரும்பிவிடுவார். நாங்கள் சந்திப்பதற்கு முன்பும், அவர் இங்கு வரும் முன்பும் கூட இதே தான் நடந்தது. என்னைத் திருமணம் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது நாட்டுடன் உறவைத் துண்டித்துக் கொள்ளச் சொல்வது சரியானது இல்லை" என்றார்.

வருமானம்

வருமானம்

இருப்பினும், இந்த முறையில் பல மில்லியன் பவுண்டுகள் வரியை அக்ஷதா செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா இரட்டை குடியுரிமையை ஏற்பதில்லை என்பதாலேயே இந்த நிலை தொடர்வதாக ரிஷி சுனக் தெரிவித்து இருந்தார். அக்ஷதாவிடம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1% குறைவான பங்குகள் உள்ளன. இதில் இருந்து அவருக்கு சுமார் 100 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.

 41 கோடி ரூபாய்

41 கோடி ரூபாய்

இதற்கு அவர் பிரிட்டனில் ஒரு பவுண்ட் கூட வரி செலுத்தவில்லை. அதுவே அவர் பிரிட்டன் குடிமகனாக இருந்து இருந்தால். அவர் 38% அதாவது, 41 கோடி ரூபாய் மதிப்பில் வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும். இருப்பினும், அவர் நான்-டோமிசைல் நிலையில் இருப்பதால் ஒரு பைசா கூட வருமான வரி செலுத்தவில்லை. இதைத்தான் அவரது எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின.

 முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

அப்போது அவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்த நிலையில், அழுத்தம் அதிகரித்தது. இதையடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனிமேல் நான்-டோமிசைல் நிலையில் வரி விலக்கு பெறப்போவது இல்லை என்றும் சட்டப்படி வரி செலுத்தத் தேவையில்லை என்றாலும் கூட தானாக முன்வந்து வெளிநாட்டில் சம்பாதித்த தொகைக்கு வரி செலுத்தப் போவதாக அறிவித்து அக்ஷதா இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+