கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது? டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் விபத்து! பாக். தொழிலதிபர் மனைவி பரபர
லண்டன்: டைட்டானில் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறியதில் உள்ளே இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இதற்கிடையே அங்கே உள்ளே இருந்த பாகிஸ்தான் தொழிலதிபர் தாவூத்தின் மனைவி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1912ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.. சிதிலமடைந்த பகுதிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் நிலையில், ஓஷன்கேட் நிறுவனம் அதைச் சுற்றுலாப் பயணிகள் காண டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியது.
அந்த கப்பல் 5 பேரை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இருப்பினும், புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அதில் இருந்து வந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடலில் அதீத அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியுள்ளது.

நீர் மூழ்கிக் கப்பல்: இதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் கொல்லப்பட்ட 5 பேரில் பாகிஸ்தான் நாட்டின் பெரும் தொழிலதிபர் ஷாஜதா தாவூத்தும் ஒருவர். அவர் தனது மகன் சுலேமான் தாவூத்துடன் உயிரிழந்தார். இதற்கிடையே டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த பாகிஸ்தான் கோடீஸ்வரர் ஷாஜதா தாவூத்தின் மனைவி கிறிஸ்டின் தாவூத் தனது கணவருடன் நடந்த கடைசி உரையாடலை நினைவு கூர்ந்தார். ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டின், உளவியலாளராக இருக்கிறார்.
தனது கணவரும் மகனும் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் செல்வதில் "மிகவும் உற்சாகமாக" இருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "96 மணி நேரத்தைக் கடந்த பிறகு நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். தேடுதல் வேட்டையின் போது நான் கடலில் இருந்தேன். 96 மணி நேரத்தை அடைந்த பிறகு, கரையிலிருந்த எனது குடும்பத்தினருக்கு மோசமானதற்கு நாம் ரெடியாக வேண்டும் எனச் சொல்லிவிட்டேன். இருப்பினும், எனது மகள் நம்பிக்கையை இழக்கவில்லை.
தந்தை எப்படியாவது வந்துவிடுவார் என நம்பிக்கையிலேயே இருந்தார். அப்போது தான் அமெரிக்கக் கடற்படை அதிகாரி நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களைக் கண்டுபிடித்தாக தெரிவித்தார். அப்போது தான் எனது குடும்பத்தினர் முழு நம்பிக்கையை இழந்தார். எனது மகன் சுலேமான் தனது ரூபிக்ஸ் கியூப் உடன் எடுத்துச் சென்றார். தண்ணீருக்கு அடியில் அதை பிக்ஸ் செய்து உலக சாதனையைப் படைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். இதன் காரணமாகவே அவரும் விரும்பி சென்றார்" என்று தெரிவித்தார்.

என்ன நடந்தது: கடைசி நிமிடங்கள் குறித்துப் பேசிய அவர், "அங்குச் செல்ல அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதனால் கிளம்பும் போது அதை வைத்துக் கிண்டல் செய்து கொண்டு இருந்தோம். எனது கணவருக்கு டைட்டானிக் என்றால் உயிர். இதனால் அவர் குழந்தை போல மிகவும் ஆர்வமாகவே இருந்தார். தந்தையும் மகனும் அதில் செல்ல மிகவும் ஆர்வமாக இருந்தார்" என்று அவர் தெரிவித்தார்.
டைட்டானிக் நீர் மூழ்கிக் கப்பல் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட போது, கிறிஸ்டின் தாவூத் தனது மகளுடன், நீர்மூழ்கிக் கப்பலின் உதவி கப்பலான போலார் பிரின்ஸில் இருந்தார். டைட்டானிக் கப்பலைப் பார்க்கக் கிளம்பிய இரண்டு மணி நேரத்திற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டின் - தாவூத் தம்பதியின் மகன் நீருக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை முடித்து உலக சாதனை படைக்கத் திட்டமிட்டிருந்தான். அதைப் பதிவு செய்ய தவூத் கேமராவை எல்லாம் எடுத்துச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications