3ம் உலகப்போர் வருது? பிரிட்டனை கதிகலங்க வைக்கும் ரஷ்ய அதிபர் புதின்! களமிறங்கிய ராட்சசனால் வார்னிங்
லண்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போருக்கு நடுவே ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் கடும் மோதல் என்பது வெடித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வருகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் இடையே மோதல் வெடிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் செயலால் பிரிட்டன் தனது மக்களுக்கு இக்கட்டான சூழலில் வாழ்வது தொடர்பான அறிவுரைகளை வழங்க தொடங்கி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. போரை நிறுத்த அமெரிக்கா எடுத்து முயற்சியும் இன்னும் முழுவதுமாக கைக்கூடவில்லை. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்கி வருகிறது. ரஷ்யாவின் படைகள் மீது உக்ரைனும் பதிலடி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

உக்ரைனுக்கு முதலில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவிகள் செய்தன. ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிபரானதும், உக்ரைனுக்கான உதவியை நிறுத்தி உள்ளார். அதேவேளையில் ஐரோப்பா தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகிறது. நிதி உதவிகளை வழங்கி வருகிறது. உக்ரைன் என்பது நேட்டோ அமைப்பில் சேர துடித்தது தான் ரஷ்யா போரை தொடங்க காரணம். நேட்டோவில் ஐரோப்பிய நாடுகள் அதிகமாக உள்ளன. இதனால் எந்த காரணம் கொண்டும் உக்ரைனை விட்டு கொடுக்க கூடாது என்று ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
இது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரசிக்கவில்லை. இதனால் ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் இடையே மோதல் என்பது நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனால் பிரான்ஸ் ஏற்கனவே தனது நாட்டு மக்களுக்கு போர் காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த கையேடுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் பிரான்சை தொடர்ந்து ரஷ்யாவின் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் தனது மக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதாவது போர்சூழல் உள்பட இக்கட்டான சமயத்தில் 72 மணிநேரத்தை கடப்பது தொடர்பான அறிவுரைகளை பிரிட்டன் தனது மக்களுக்கு வழங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான். அதாவது ரஷ்யாவின் உளவு கப்பலமான யாந்தர் தற்போது வடக்கு கடல் பகுதியில் வலம் வருகிறது.
அதாவது கடந்த 2002ம் ஆண்டில் ஜெர்மனியின் நார்த் ஸ்டீரிம் பைப்லைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்ற தாக்குதல் பிரிட்டனுக்கு கடல் வழியாக கியாஸ் கொண்டு வரும் பைப்லைன் மீது நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது பிரிட்டனுக்கு தற்போது நார்வேயில் இருந்து கியாஸ் வருகிறது. இந்த கியாஸ் என்பது கடல் வழியாக 700 மைல் தூர பைப்லைன் வழியாக வருகிறது. இந்த பைப்லைனுக்கு ‛லாங்கல்ட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கியாஸ் பைப்லைன் நார்வேயின் கோசா தீவில் உள்ள நிஹாம்னா எரிவாயு தொழிற்சாலையில் இருந்து பிரிட்டனின் கவண்டி டர்ஹமில் உள்ள ஈசிங்டன் எரிவாயு முனையம் வரை போடப்பட்டுள்ளது. இந்த பைப்லைன் தான் தற்போது பிரிட்டனுக்கு தேவையான 40 சதவீத கியாஸ் சப்ளையை பூர்த்தி செய்கிறது. இந்த கியாஸ் பைப்லைனை ரஷ்யா தாக்கினால் அது பிரிட்டனுக்கு செல்லும் 40 சதவீத கியாஸ் சப்ளையை பாதிக்கும்.
இந்நிலையில் தான் இந்த கியாஸ் பைப்லைனை குறிவைத்து ரஷ்யாவின் உளவு கப்பலான ‛யாந்தர்' வடக்கு கடல் பகுதியில் வலம் வருகிறது. இந்த உளவு கப்பல் என்பது நீர்மூழ்கி கப்பல்களை 20 ஆயிரம் அடி ஆழம் வரை அனுப்பி கியாஸ் பைப்லைனை வெடிக்க செய்யும் சக்தி கொண்டதாகும். இதனால் ரஷ்யா, பிரிட்டனுக்கான கியாஸ் சப்ளையை முடக்கும் வகையில் திட்டமிட்டு வடக்கு கடலில் உளவு பார்த்து வருவதாக நினைக்கிறது. ஒருவேளை ரஷ்யா அந்த பைப்லைனை தாக்கினால் கியாஸ் சப்ளை பாதிக்கும்.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய குறைந்தபட்சம் 3 நாட்கள் வரை நேரம் எடுக்கும். இதனால் இக்கட்டான சூழலில் 72 மணிநேரம் உயிர் வாழதேவையான பொருட்களுடன் தயாராக வைத்து கொள்ள பிரிட்டன் அறிவுரை வழங்கி உள்ளது. முன்னதாக பிரிட்டன் ராணுவத்தின் தலைமை ஜெனரல் பட்ரிக் சண்டர்ஸ் கூறுகையில், ‛‛தற்போது ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நடுகளால் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் போராக மாறலாம். குறிப்பாக அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பிரிட்டன் போருக்கு தயாராக வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இப்படி போர் வெடிக்கும்போது அது 3ம் உலகப்போராக மாறும் அச்சம் உள்ளது. ஏனென்றால் பிரிட்டன் என்பது நேட்டோ அமைப்பில் உள்ளது. பிரிட்டன் மீது ரஷ்யா உள்பட பிற நாடுகள் தாக்கும்போது நேட்டோ நாடுகள் உதவிக்கு வரும். இதனால் மோதல் வலுத்து பெரும் போராக மாறலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications