கத்தியை காட்டி.. மேல் வீட்டு அண்ணன்கள் செய்த கொடூரம்! 11 வயதிலேயே தாயான சிறுமி.. ஷாக் சம்பவம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமியை 8 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்த 2 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் தற்போது இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார் (21). இவரது சகோதரர் திலீப் குமார்(19). இவர்கள் இருவரும் அபார்ட்மென்ட் ஒன்றில் இரண்டாவது அடுக்கில் குடும்பத்தினருடன் தங்கி வந்துள்ளனர். இதே அபார்ட்மென்ட்டில் முதல் அடுக்கில் இளம் தம்பதியினர் தங்களது 11 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரதீப் குமாரும், திலீப் குமாரும் இந்த சிறுமியுடன் விளையாடி வந்துள்ளனர்.
பெற்றோரும் இதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாள் இவர்கள் சிறுமியை தனியாக அழைத்துள்ளனர். அங்கு கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிறுமிக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுள்ளது. சிறுமி அதிகம் சோர்வாக இருந்திருக்கிறார்.
ஆயுதங்களை ரெடியா வெச்சுக்குங்க.. அட்லீஸ்ட் கத்தி.. கர்நாடகாவில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்!

பாலியல் பலாத்காரம்
இது குறித்து தனது அம்மாவிடம் சொல்ல சிறுமி முயன்றபோது இந்த இளைஞர் சிறுமியின் தாயை கொண்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி இந்த விஷயத்தை அப்படியே மறைத்திருக்கிறார். இதனையடுத்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் சிறுமியின் உடல் நிலைியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவரது தாய் கண்டுபிடித்துள்ளார். பின்னர் விசாரித்தபோது கடந்த 8 மாத காலமாக சிறுமியை இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புகார்
இதனை எதிர்பார்க்காத பெற்றோர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரையடுத்து இளைஞர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதம் சிறுமி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து குழந்தையின் டிஎன்ஏவும் சகோதரர்கள் இருவரின் டிஎன்ஏவும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சகோதரர்கள் இருவரில் ஒருவரின் டிஎன்ஏவுடன் சிறுமியின் டிஎன்ஏ ஒத்துபோனது. இதனையடுத்து குழந்தையை மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தத்தெடுத்துள்ளது.

ஆயுள் தண்டனை
வழக்கை பொறுத்த அளவில் அரசு தரப்பிலிருந்து சுமார் 15 சாட்சியங்கள் ஆஜர்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதேபோல இளைஞர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளைஞர்களுக்கு வயதான பெற்றோர்கள் இருப்பதால் அவர்களை கவனித்துக்கொள்ள ஆள் வேண்டும் எனவே குறைந்தபட்ச தண்டனை வேண்டும் என்று வாதாடினார். ஆனால் இந்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. எனவே இருவருக்கும் ஆயுள் தண்டைனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மற்றொரு வழக்கு
மேலும் 11 வயதுக்கு குறைந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமனறம் கூறியிருந்தது. அதேபோல இந்த சிறுமி வேறு ஒரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது குறித்த வழக்கும் தற்போது நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.