Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீண்ட ஆயுள் வேண்டுமா? ‛செக்ஸ்’ உறவை தள்ளிபோடனுமாம்.. அடித்து சொல்லும் 126 வயது தாத்தா!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உடலுறவு இல்லாததும், ஒழுக்கமான வாழ்க்கையை கடைப்பிடித்ததுமே தனது ஆரோக்கியத்திற்கு காரணம் என்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த 126 வயது முதியவர் ஒருவர் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான டிப்ஸ்களையும் இந்த காலத்து இளைஞர்களுக்கு அவர் கூறியுள்ளார்.

உலகிலேயே வயது முதிர்ந்த நபராக இவர் இருப்பார் எனக் கருதப்படும் நிலையில், அதற்கான கின்னஸ் ரெக்கார்டு முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

பார்த்தால் நம்ப முடியாது

பார்த்தால் நம்ப முடியாது

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சிவானந்தா. இவர் 1892-ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். சமீபத்தில் தனது 126-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சிவானந்தா கொண்டாடினார். இவருக்கு 126 வயது என்றால் பார்ப்பவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். 80 வயது மதிக்கத்தக்கவரை போலவே தோற்றத்தை கொண்டிருக்கிறார் சிவானந்தா. இந்த வயதிலும் யாருடைய துணையும் இன்றி தனது வேலையை தானே பார்த்துக் கொள்கிறார். வாரத்திற்கு இரண்டு நாட்கள் தனியாக வெளியூர் பயணம் செய்து வருகிறார் சிவானந்தா.

வறுமையில் கழிந்த இளமை

வறுமையில் கழிந்த இளமை

சிவானந்தாவுக்கு 6 வயது இருக்கும் போதே அவரது தாய் - தந்தையை இழந்துவிட்டார். பின்னர் உறவினர் பராமரிப்பில் வளர்ந்த அவருக்கு, பல நாட்கள் சரியாக உணவு கிடைக்காது. இதனால் பல நாட்கள் பட்டினியாகவே உறங்கியுள்ளார் சிவானந்தா. பின்னர் 12 வயதில் அவரை ஒரு யோகா குருவிடம் உறவினர்கள் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகுதான் அவரது வாழ்க்கையே மாறியுள்ளது. அந்த யோகா குருவிடம் இருந்து பல ஆசனங்களை கற்றுத்தேர்ந்த சிவானந்தா, இந்தியா முழுவதும் அவருடன் சேர்ந்து சுற்றி வந்துள்ளார். அந்த யோகா ஆசனங்களும், பயணங்களும்தான் தன்னை ஒரு முழு மனிதனாக மாற்றியது என்கிறார் சிவானந்தா.

"உடலுறவு வைத்துக்கொண்டதில்லை"

தனது ஆரோக்கியத்தின் ரகசியம் குறித்து கேட்ட போது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் சிவானந்தா. அவர் கூறுகையில், "நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு நன்றாக சாப்பிட வேண்டும் என சிலர் கருதுகிறார்கள். அது தவறான புரிதல். அரை வயிற்று உணவுதான் நீண்ட ஆயுளின் ரகசியம். நான் இப்போது வரை வயிறு நிறைய சாப்பிட்டதில்லை. அதேபோல, வேக வைத்த உணவுகளை மட்டுமே உண்கிறேன். என் வாழ்நாளில் ஒருமுறை கூட உடலுறவு வைத்துக் கொண்டதில்லை. எனது பிரம்மச்சரிய வாழ்க்கையும், மசாலா பொருட்களை தவிர்த்ததும், தினமும் யோகா செய்ததுமே இந்த வயது வரை நான் ஆரோக்கியமாக வாழ காரணம்" என்கிறார் சிவானந்தா. தனது இளமைக்காலம் முதல் இப்போது வரை வெறும் தரையில் படுப்பதையும், தலையணைக்கு பதிலாக மரப்பலகையை பயன்படுத்துவதையுமே வழக்கமாக வைத்துள்ளார் சிவானந்தார்.

"தொழில்நுட்பமே கெடுக்கிறது"

இன்றைய இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டபோது, "அந்த காலத்தில் மக்கள் மின்சாரம் கூட இல்லாத நிலையில் இருந்தனர். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தனர். எந்த அறிவியல் சாதனங்களும் எங்களிடம் இல்லை. ஆனால் மனதில் நிலையான அமைதி இருந்தது. ஆனால், இந்த காலத்து இளைஞர்கள் அறிவியல் சாதனங்களுடன் தான் வாழ்க்கையை கழிக்கின்றனர். அதுதான் அவர்களின் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தனை தொழில்நுட்பங்களை வைத்திருந்தாலும் இப்போது உள்ள இளைஞர்கள் மகிழ்ச்சியாகவும் இல்லை. ஆரோக்கியமாகவும் இல்லை. இதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பெரும்பாலானோரிடம் நேர்மை சிறிது கூட இல்லை. இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல" என சிவானந்தா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+