கங்கையில் இப்தார் நோன்பு.. இந்துகளை புண்படுத்தியதாக 14 பேர் கைது! பாஜக புகாரில் உபி போலீஸ் அதிரடி
லக்னோ: உத்தர பிரேதச மாநிலம் வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் படகில் சிக்கன் பிரியாணியுடன் இப்தார் விருந்தில் பங்கேற்ற 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறிய பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத உணர்வை புண்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

கடந்த மாதம் 18 ம் தேதி ரமலான் பிறை தெரிந்தது. இதையடுத்து பிப்ரவரி 19ம் தேதி முதல் ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது. இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். விரைவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இப்தார் உணவு
இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் . சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை அவர்கள் உணவு எடுத்து கொள்வது இல்லை.
சூரிய உதயத்துக்கு முந்தைய காலை நேரத்தில் இஸ்லாமியர்கள் உண்ணும் உணவு சுகூர் எனவும், சூரிய அஸ்தமனத்துக்கு பிறகான மாலை நேர நோன்பு முடிக்கும் உணவுக்கு இப்தார் என்றும் பெயர். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் 14 பேர் இப்தாருடன் நோன்பை முடித்தனர்.
வெளியான வீடியோ
இவர்கள் படகில் கங்கை நதிக்கு சென்று சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி வாரணாசி நகர பாஜகவி்ன இளைஞர் பிரிவின் தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால் கூறுகையில், ''சனாதன தர்மத்தை பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் கங்கை நதி புனிதமானது. இந்துக்களின் நம்பிக்கையாக இந்த நதி உள்ளது.
போலீசில் புகார்
உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இந்துக்கள் கங்கை நதியில் தினமும் புனித நீராடி வருகின்றனர். இப்படியான சூழலில் படகில் இருந்து சிக்கன் பிரியாணி் சாப்பிட்டு அதன் கழிவுகளை கங்கை நதியில் போட்டுள்னர். இது ஏற்க முடியாது. இது இந்துக்களின் மதஉணர்வை புண்படுத்தி உள்ளது'' என்றார். மேலும் சம்பவம் தொடர்பாக ரஜத் ஜெய்ஸ்வால் போலீசில் புகார் செய்யப்பட்டது.
14 பேர் கைது - 5 பிரிவுகளில் வழக்கு
இந்த புகாரை தொடர்ந்து கங்கை நதியில் இப்தார் உணவு எடுத்து கொண்ட 14 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிஎன்எஸ் சட்டப்பிரிவு 298 (குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் நோக்கில் வழிபாட்டு தலத்தை களங்கப்படுத்துதல்), 299 (மதஉணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே செயல்படுதல்), 196 (1)பி ( மதம், இன அடிப்படையில் இருதரப்பினர் இடையே பகையை வளர்த்தல்), 279 (நீர்நிலையை அசுத்தம் செய்தல்), 270 (பொதுஅமைதியை சீர்குலைத்தல்) உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதஇவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாரணாசி கூடுதல் எஸ்பி பிரதாப் சிங் கூறுகையில், ''கங்கை நதியில் இருந்து இப்தார் உணவு எடுத்து கொண்ட வீடியோ இணையதளங்களில் பரவியது. அவர்கள் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதனபடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications