14 வயசுதான்.. தலித் பெண்ணை.. 7 வருஷமாக.. லக்னோவை பதற வைத்த காமவெறியன்!
லக்னோ: 7 வருஷமாக ஒரு தலித் பெண்ணை பலமுறை மிரட்டி மிரட்டியே சீரழித்து வந்துள்ளது ஒரு காம மிருகம்.. இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிப்பிட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு 21 வயதாகிறது.. தலித் சமூகத்தை சார்ந்தவர்.
கடந்த 2013-ல் இந்த பெண்ணுக்கு 14 வயது.. அப்போது 9-ம் கிளாஸ் படித்து கொண்டிருந்தார்.. 2012- டிசம்பர் மாதம், பள்ளியில் ஸ்காலர்ஷிப் வந்துள்ளது. அதனால், அதனை பெற்று கொள்வதற்காக இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள சுவிதா கேந்த்ரா என்ற கிராம அலுவலகத்துக்கு சென்றார்.. அங்குதான் பிரேம்லால் உட்கார்ந்திருந்தார்.. அந்த ஆபீசில் வேலை பார்ப்பவர்.. அவரிடம் விண்ணப்பத்தை தந்துவிட்டு வந்துவிட்டார்.
நடு ராத்திரியில்.. தூங்கிய மனைவியை உற்று பார்த்த கணவர்.. அலறி அடித்துக் கொண்டு.. கொடுமை!

பிரேம்லால்
இதற்கு பிறகு, 2013 ஜனவரியில், ஒரு டவுன் பகுதிக்கு சென்று மருந்து வாங்கி கொண்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார் சிறுமி.. அப்போது பிரேம்லால் அங்கே வந்திருக்கிறார்.. சிறுமியை பார்த்ததும், தன் வண்டியிலேயே வீட்டில் விடுவதாக சொல்லி, பைக்கில் ஏற்றிக் கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

வீடியோ
அங்கு பலமுறை மிரட்டி மிரட்டியே பலாத்காரம் செய்துள்ளார்.. மேலும் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் வீடியோவை காட்டியே சிறுமியை சீரழித்துள்ளார் பிரேம்லால். இப்படியே 7 வருடங்கள் ஓடிவிட்டது. இப்போது அந்த பெண்ணுக்கு 21 வயதாகிவிட்டது. 7 வருடமாக சிறுமியை சிதைத்தும்விட்டு, கடைசியில் அந்த வீடியோவையும் பிரேம்லால் சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டார்.

தர்ணா
இதை பார்த்து பதறிபோன அந்த பெண், மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் புகார் தந்தார்.. பிரேம்லால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தர்ணாவிலும் ஈடுபட்டுள்ளார்.. இது தெரிந்ததும் போலீசார், பிரேம்லால் மீது வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், என்ன ஒரு சோகம் என்றால், இன்னும் பிரேம்லாலை கைது செய்யவே இல்லையாம்.. இதனால் கொதிப்படைந்த பெண், தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

ஆவேசம்
பிரேம்லால் கைது செய்யப்படாதது குறித்து அந்த மாவட்ட எஸ்பி சொல்லும்போது, சம்பவம் நடந்து 7 வருஷமாகி விட்டது.. அதனால் விசாரணை நடந்து வருகிறது.. அது முடிந்தபிறகு கண்டிப்பாக பிரேம்லாலை கைது செய்வோம் என்கின்றனர்.. எனினும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் "தர்ணா" ஆவேசத்துடன் தொடர்ந்து நடந்து வருகிறது!