8 வயசு தான்! தங்கை முறை சிறுமியிடம் அத்துமீறிய 10 வயது சிறுவன்! என்னது.. பெற்றோரும் ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பத்து வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடத்தி வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே.

குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட மைனர் சிறுமிகள், பழங்குடியின தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஆளாகி வருவதும் கணிசமாக அதிகரித்துள்ளது. என்கவுண்டர் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் உபி போலீசார் திணறுகின்றனர்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

ஒருபுறம் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாக யோகி ஆதித்யநாத் அரசு கூறி வந்தாலும் ஊடகங்களில் நாளுக்கு நாள் பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக மைனர் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்து வருவது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இந்த நிலையில் தான் எட்டு வயது சிறுமியை 10 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்கள் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

10 வயது சிறுவன்

10 வயது சிறுவன்

உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே வசிக்கும் சிறுமியுடன் சகோதரன் போல பழகி வந்திருக்கிறார். அந்த சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டுப்பாடம் சொல்லித் தருவதாக கூறி அந்த சிறுமி தனியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமி அலறியதால் அங்கிருந்து சிறுவன் தப்பி ஓடி நிலையில் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த போது தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

கைது

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மிரட்டல் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் நீதிமன்ற குழு முன்பு ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்திய போது பெற்றோர் படிப்பதற்காக தனக்கு வாங்கி கொடுத்த செல்போனில் ஆபாச படங்கள் பார்த்ததாகவும் அதனை தொடர்ந்து சிறுமியிடம் அத்துமீறிலில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார்.

 பெற்றோர் காரணம்?

பெற்றோர் காரணம்?

இதனால் அதிர்ந்து போன போலீசார் சிறுவனின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆபாச படம் பார்த்து பத்து வயதே நிரம்பிய சிறுவன் எட்டு வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் உரிய முறையில் அவர்களை கண்காணிப்பதோடு முடிந்தவரை அருகில் இருந்தே கவனித்துக் கொள்ள வேண்டும் என போலீசார் கூறியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+