Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணம் செய்து வையுங்க.. நேராக போலீஸ் நிலையம் சென்ற இளைஞர்.. வித்தியாச மனு! குவியும் சப்போர்ட்!

திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் போலீசாரிடம் மனு மூலம் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 3 அடி உயரம் கொண்ட இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 3 அடி உயரம் கொண்ட இளைஞர் ஒருவர் ‛எனக்கு மணப்பெண் கிடைக்கவில்லை. மணப்பெண்ணை கண்டுபிடித்து திருமணத்துக்கு உதவி செய்ய வேண்டும்' என போலீசில் வித்தியாசமான மனு அளித்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு பலரும் சப்போர்ட் செய்ய தொடங்கி உள்ளனர்.

திருமணம்.. ஆண் அல்லது பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு செல்வதற்கான சுபநிகழ்ச்சி. திருமணம் என்பது ஒரு தரப்புக்கும் எளிமையானதாக இருக்கும் வேளையில் தான் மற்றொரு தரப்புக்கு கடினமான ஒன்றாக மாறி உள்ளது. அதாவது சிலருக்கு மணப்பெண், மணமகன் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.

இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். இந்நிலையில் தான் திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. திருமணத்துக்கு உதவி செய்ய வேண்டும் என உத்தர பிரதேச இளைஞர் ஒருவர் போலீசில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

3 அடி இளைஞர்

3 அடி இளைஞர்

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள காடாலி பகுதியை சேர்ந்தவர் முகமது டேனிஷ் (வயது 20). 3 அடி உயரம் கொண்டவர். இவர் தனது பெற்றோர் மற்றும் 4 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். முகமது டேனிஷ் தனது தாயுடன் சேர்ந்து துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தனக்கு ஏற்றாற்போல் மணப்பெண் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

போலீசில் கோரிக்கை மனு

போலீசில் கோரிக்கை மனு

இதனால் அவர் நேரடியாக காடாலி போலீஸ் நிலையம் சென்று போலீசாரிடம் ஒரு புகார் மனு ஒன்றை வழங்கினார். அதில், ‛‛எனக்கு திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடினோம். வளர்ச்சி குறைவால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மணப்பெண்ணை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் உதவி செய்ய வேண்டும்'' என கோரிக்கையாக வைத்துள்ளார்.

குவியும் சப்போர்ட்

குவியும் சப்போர்ட்

இதுபற்றி போலீஸ்காரர் சஞ்சீவ் குமார் தலால் கூறுகையில், ‛‛இது முற்றிலும் வித்தியாசமான கோரிக்கையாக உள்ளது. இதன்மீது என்ன செய்யலாம் என்பது பற்றி அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும். இதற்கிடையே முகமது டேனிஷ் போலீசில் கோரிக்கை மனு அளித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு சப்போர்ட்டாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

முன்பு நடந்தது என்ன?

முன்பு நடந்தது என்ன?

முன்னதாக சாம்லி மாவட்டத்தை சேர்ந்த கைராணா பகுதியை சேர்ந்த 27 வயது நிரம்பிய அசீம் மன்சூரியும் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கபப்டடு இருந்தார். இவர் தனக்கு திருமணம் உதவி கோரி உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் போலீசில் புகார் மனு அளித்தார். இது செய்தியாக வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ம் தேதி அவருக்கு திருமணம் நடந்தது. அந்த வகையில் தற்போது முகமது டேனிஷ் போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+