Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதிய உணவு சாப்பிட்டு சரிந்த மழலைகள்.. சாமியாரை அழைத்து மந்திரம் ஓதிய பள்ளி நிர்வாகம்! உபியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் பலர் மயக்கம் அடைத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள மஹுவா கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள 100க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையான நேற்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உணவை சாப்பிட்ட மாணவிகள் சிலர் மயங்கி விழுந்துள்ளனர்.

உடல் நலக்கோளாறு

உடல் நலக்கோளாறு

இதனையடுத்து அதிர்ந்துபோன பள்ளி நிர்வாகம் மாணவிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் அருகில் இருக்கும் சாமியாரை பள்ளிக்கு வரவழைத்துள்ளது. இதனையடுத்து சாமியார் பள்ளி மாணவிகளுக்கு பூஜை செய்திருக்கிறார். சிறுமிகளின் காதை பிடித்து மந்திரம் ஓதியுள்ளார். பின்னர் விபூதி பூசிவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் மந்திரம் ஓதியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்துள்ளனர். அங்கு மந்திரம் ஓதிக்கொண்டிருந்த சாமியரை விரட்டியனுப்பிய அவர்கள் மாணவிகளை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விளக்கம்

விளக்கம்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தீட்சித் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல மதிய உணவு சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிர் நிலவுவதால் கூட சில நேரங்களில் உணவு கெட்டுபோய் இருந்திருக்கலாம். ஆனால் ஆய்வு முடிவு வந்த பின்னரே உண்மையான காரணம் கண்டறியப்படும். அதேபோல மந்திரவாதியை அழைத்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 9-13 வயது வரை உள்ள மாணவிகள்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் குணமடைவார்கள்" என்று கூறியுள்ளார்.

காரணம்

காரணம்

இது குறித்து உள்ளூர் வாசிகள் கூறுகையில், "இந்த பள்ளியில் பேய்கள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் ஏதோ இன்று நேற்று நடப்பதல்ல. பல நாட்களாக இது போல சிறுமிகள் பலர் இந்த உணவை சாப்பிட்டு உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுள்ளனர். அதேபோல இரவு நேரங்களில் இங்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். பள்ளிக்குள் இருந்து ஒரு அழுகை குரல் அடிக்கடி கேட்கும். அதுவும் நாங்கள் தூங்கும்போதுதான் கேட்கும். எனவேதான் இங்கு என்ன நடந்தாலும் முதலில் நாங்கள் மந்திரவாதிகளை வரவழைக்கிறோம்.

 பயம்

பயம்

தற்போது குழந்தைகள் சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுவதற்கு முன்னர் அவர்களில் ஒருவர் பெண் ஒருவரை பார்த்திருக்கிறார். அப்பெண் வெள்ளை நிற உடை அணிந்திருந்ததாகவும், ஆனால் சிறிது நேரம் கழித்து மறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? நீங்கள் சிறிது நேரத்தில் இங்கிருந்து கிளம்பி விடுவீர்கள். ஆனால் நாங்கள்தான் நிரந்தரமாக இங்கு இருக்கப்போகும் மக்கள். எனவே எங்களுக்குதான் இதில் உள்ள கஷ்டம் தெரியும்" என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் பயம் காரணமாக மயங்கி விழுந்துள்ளதாக கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+