பொது இடத்தில் தாக்குதல்! மாணவி தற்கொலை... உத்தரப் பிரதேசத்தில் பதற்றம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியிலிருந்து கீழே குதித்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்.21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அது கல்லூரியை சேர்ந்த சித்தாந்த் குமார் பன்வார் எனும் மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
மீரட்டில் இயங்கி வரும் சுபாரதி எனும் தனியார் மருத்துவக் கல்லூரியில் வானியா ஆசாத் எனும் மாணவி பல் மருத்துவம் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென இரண்டு தினங்களுக்கு (அக்.19) முன்னர் கல்லூரியின் நூலக கட்டிடத்தின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். அவரை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.21) மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்ஃபி
சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் லிசாடிகேட் பகுதியில் உள்ள ரஷித்நகரில் வசித்து வரும் வானியா ஆசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சுபாரதி எனும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வருகிறார். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் அவர் கல்லூரியின் நூலகத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு தன்னுடன் இருந்த தோழிகளிடம் வானிலை நன்றாக இருப்பதாகவும் செல்ஃபி எடுக்க மொட்டை மாடிக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து யாருக்கோ செல்போனில் அழைத்திருக்கிறார்.

சிகிச்சை
பிறகு சுமார் 60 அடி உயரம் கொண்ட நான்காவது மாடியிலிருந்து குதித்துள்ளார். குதிப்பதற்கு முன்னர் கீழே இருந்த மாணவர்கள் குதிக்க வேண்டாம் என்று கூச்சலிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் உடனடியாக வானியாவை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் வானியா கீழே குதித்ததில் அவரது கை, கால்கள் மற்றும் முதுகெலும்பு ஆகியை உடைந்துள்ளன. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டன.

கைது
இதனால் மூளைக்கு ரத்த ஓட்டம் அடிக்கடி தடைப்பட்டுள்ளது. வானியா பிழைப்பது கடினம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார். இந்த மாணவி இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்" என ஜானி காவல் நிலைய அதிகாரி ராஜேஷ் குமார் கம்போஜ் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பா வானியா ஆசாத்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக இந்து சமூகத்தை சேர்ந்த சித்தாந்த் குமார் பன்வார் எனும் சக மாணவரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தாக்குதல்
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கையில் சித்தாந்த் குமார் பன்வார் சக மாணவியான வானியா ஆசாத்தை பொது இடத்தில் வைத்து ஒருமுறை கன்னத்தில் அறைந்துள்ளார். இதன் காரணமாக கூட மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து கல்லூரியின் சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்து மதத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தாக்கியதால் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications