உபியில் அவலத்தின் உச்சம்.. ஆசிரியரே இப்படி பண்ணலாமா?.. பள்ளி வகுப்பறையில் பீர் அருந்திய ஆசிரியர்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவ மாணவிகள் முன்பு பீர் அருந்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வதுண்டு... குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பதில் பெற்றோருக்கு அடுத்த ஸ்தானம் ஆசியருக்கே உண்டு.
இதனாலேயே இறைவனுக்கும் முன்பாக குருவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏனெனில், பள்ளி செல்லும் வயதில் இருந்து கல்லூரி காலம் வரை ஒரு மாணவனை அவன் திறமையை கண்டறிந்து அதற்கேற்றவாறு வார்ப்பதில் ஆசிரியரின் பங்கு அளப்றியதாக இருக்கிறது.

ஒட்டு மொத்த ஆசிரியர்களுக்கே
ஒரு ஏணி போல ஏற்றிவிட்டு ஒரு தலைமுறையை முன்னேற்றும் மிகப்பெரும் தொண்டு பணிதான் ஆசிரியர் பணி என்றால் சற்றும் மிகையாது. எத்தனையோ நல்ல ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவை செழிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனார். ஆனாலும் புல்லுருவிகள் போல சில ஆசிரியர்கள் தவறான முன்னுதாரணமாக நடப்பது ஒட்டு மொத்த ஆசிரியர்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறது.

மாணவ மாணவிகள் முன்பு
வகுப்பறைக்குள் குடித்து விட்டு வருவது, மாணவ மாணவிகள் முன் முறைகேடாக நடந்து கொள்வது என அவ்வப்போது அவல சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இதேபோன்று தான் தற்போது உத்தர பிரதேசத்தின் ஹத்ரஸ் பகுதியில் ஒரு பள்ளியில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்து இருக்கிறது. அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரிய ஒருவர் பள்ளிக்கூட வகுப்பறைக்குள் மாணவ மாணவிகள் முன்பு மது அருந்துவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறைக்குள் மது அருந்தும் ஆசிரியர்
அந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் இருந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நடுத்தர வயது ஆசிரியர் ஒருவர் தனது மேஜைக்கு கீழே ஒரு பீர் பாட்டில், கையில் ஒரு பீர் பாட்டில் என இரண்டு பீர் பாட்டில்களுடன் வகுப்பறைக்குள் அமர்ந்து இருக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

2 பீர் பாட்டிலுடன்
சில நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் முன்பாக ஆசிரியர் ஒருவர் மதுஅருந்தி கொண்டு இருக்கிறார். பால்மணம் மாறாத இளம் சிறார்கள் தரையில் அமர்ந்து இதை கவனித்து கொண்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. கடுமையான போதையில் சேரில் ஆசிரியர் அமர்ந்து இருக்கிறார். அப்போது, மேஜைக்கு கீழே ஒரு காலி பீர் பாட்டில் உள்ளது.

டெல்லி மகளிர் ஆணைய தலைவி
வீடியோ எடுப்பது தெரிந்ததும் இந்த பீர் பாட்டில்களை மறைக்க அந்த ஆசிரியர் முயற்சிப்பது போல உள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால், தனது ட்விட்டரில் இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

எதிர்காலம் எப்படி இருக்கும்?
மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''கடும் போதையில் இருக்கும் ஆசிரியர் மாணவிகளுக்கு பாடம் எடுக்கிறார். இந்த வீடியோ ஹத்ராசில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் இப்படி நடந்து கொண்டால் இந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உடனடியாக உத்தர பிரதேச போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications