உன்னாவ் பாலியல் வழக்கு.. புகார் கூறிய பெண் மீது கொலை முயற்சி.. வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு!
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது. இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக குல்தீப் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். வரிசையாக அந்த பெண்ணுக்கு நெருக்கமான உறவினர்கள் வரிசையாக மரணம் அடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர். அந்த உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உத்தர பிரதேச போலீஸ் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்ற புகார் உள்ளது. இந்த நிலையில் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு மட்டும் தனியாக சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உன்னாவ் விபத்து படுகொலை முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாஜக எம்எல்ஏ குல்தீப் உட்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் குல்தீப் தற்போது பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications