ஓவர் அடம்: மே.வங்கம், பஞ்சாப்பை தொடர்ந்து காங்கிரஸுக்கு குட்பை சொல்லும் உ.பி. அகிலேஷின் சமாஜ்வாதி?
லக்னோ: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிகளைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அடம் பிடிக்கும் காங்கிரஸ் கட்சியை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கழற்றிவிடக் கூடிய சாத்தியங்களே அதிகம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் முதல்வர் மமதா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் களத்திலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

மே.வங்கம், பஞ்சாப்பில் காங். உறவு முறிவு: இதனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் அதிகபட்சமாக 4 தொகுதிகளை ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்தது. இந்த 4 தொகுதிகளில் 1 அல்லது 2-ல் தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இம்முடிவை மமதா பானர்ஜி எடுத்திருந்தார். ஆனால் நாங்க பெரிய கட்சி.. எங்களுக்கு 10 சீட் தர வேண்டும் முரண்டுபிடித்தது காங்கிரஸ். இதனால் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக மமதா பானர்ஜி அறிவித்தார். இதேபோலாதான் பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மியிடம் அதீதமான தொகுதி பேரம் நடத்தியது காங்கிரஸ். மமதா பானர்ஜியின் அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸுடன் உறவை முறித்து கொள்வதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அதிரடியாக அறிவித்தார்.
சமாஜ்வாதியிடமும் அடம் பிடிக்கும் காங்கிரஸ்: தற்போதைய நிலையில் பீகார், உ.பி., தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் கூட்டணி கட்சிகளான ஆர்ஜேடி, சமாஜ்வாதி, திமுக, என்சிபி-சிவசேனாவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநில பேச்சுவார்த்தையும் விரைவில் முறிந்துவிடும் என்றே கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக- சமாஜ்வாதி கட்சி இடையேதான் போட்டி. சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ், ஆர்எல்டி கட்சிகள் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியே தோற்றுப் போனார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் இருக்கிறதா? என்பதே தெரியவில்லை. இதனால் உத்தரப்பிரதேசத்தில் 2 முதல் 8 அல்லது 9 தொகுதிகள் வரை சிங்கிள் டிஜிட் இடங்களைத் தரலாம் என்பது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி நிலைப்பாடு. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, நாங்க மிகப் பெரிய கட்சி.. எங்களுக்கு 20 சீட் தர வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸுக்கு சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் 20 இடங்களைத் தரவே தராது என்பதுதான் நிலைமை. காங்கிரஸ் தொடர்ந்து அடம்பிடித்தால் மமதாவின் திரிணாமுல், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி பாணியில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸுடனான உறவை முறித்து கொள்ளவே வாய்ப்பு அதிகம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications