சிகரெட் வாங்கித் தர மறுத்த இளைஞர்.. பிறப்புறுப்புக்குள் 'ஏர் கம்ப்ரஸரை' சொருகிய ரவுடி.. பரிதாபம்
லக்னோ: தனக்கு சிகரெட் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவுடி ஒருவன், இளைஞரின் ஆணுறுப்புக்குள் காற்றடிக்கும் கருவியை (ஏர் கம்ப்ரஸர்) சொருகியதால் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அந்த இளைஞர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ரவுடியை உத்தரபிரதேச போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும், இந்தக் கொடூர சம்பவத்தில் ரவுடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடைகளை களைந்து.. வயல்வெளியில் அக்கிரமம்.. துண்டாக போன "உதடுகள்".. பதறிய ஊர்ஜனம்.. பரிதாப பெண்.. ஐயோ

வேலை ஏவும் ரவுடி
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ராகேஷ்மார்ஹ் பகுதியில் கார் மெக்கானிக் கடை இயங்கி வருகிறது. இங்கு விஜய் (19) என்ற இளைஞர் கார் கழுவும் வேலையை செய்து வருகிறார். இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான மோஹித் (32) என்பவர் வாரந்தோறும் இந்த மெக்கானிக் கடைக்கு வந்து மாமூல் வாங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த சமயங்களில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விஜயிடம் தனக்கு டீ, சிகரெட் உள்ளிட்டவற்றை வாங்கி வருமாறு வேலை ஏவுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ரவுடி மோஹித்.

பிறப்புறுப்புக்குள் சொருகி
இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை அங்கு வந்த ரவுடி மோஹித், மாமூல் பணத்தை வாங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த விஜயிடம் தனக்கு சிகரெட் வாங்கித் தருமாறு கூறியுள்ளார். ஆனால் விஜய், "தனக்கு இப்போது வேலை உள்ளது.. என்னால் வாங்கித் தர முடியாது" எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மோஹித்தும் அவரது நண்பர்களும் விஜயை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த ஏர் கம்ப்ரஸரை எடுத்து விஜயின் பிறப்புறுப்புக்குள் சொருகி காற்றடித்திருக்கிறார்.

கவலைக்கிடம்
இதில் சில நிமிடங்களில் விஜய் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த ரவுடி மோஹித்தும் அவரது நண்பர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. இதனிடையே, விஜய் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரவுடி மோஹித்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை
இந்நிலையில், ஏர் கம்ப்ரஸரால் எப்படி ஆபத்து ஏற்படுகிறது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகயைில், "ஏர் கம்ப்ரஸரை சிலர் விளையாட்டாக ஆசன வாய்க்குள்ளோ, பிறப்புறுப்புக்குள்ளோ சொருகி காற்றடித்து விடுகிறார்கள். அது அவர்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதிக அழுத்தத்தில் காற்று வயிற்றுக்குள் செல்வதால், பெருங்குடல் மற்றும் சிறு குடல்களில் அந்தக் காற்று நிரம்பிவிடுகிறது. இதனால் குடல்கள் வீக்கமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுகிறது" எனக் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications