அகிலேஷ் யாதவ் திடீர் அதிரடி- சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு என அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைப்பதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் 2 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 2 தொகுதிகளில் ஒன்று அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்தது. மற்றொன்று கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கான் ராஜினாமா செய்தது. இருவரும் சட்டசபை தேர்தலில் வென்று எம்.எல்.ஏக்களானதால் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையுமே பாஜகவிடம் அகிலேஷ் யாதவ் கட்சி பறிகொடுத்தது. ராம்பூர் தொகுதியில் பாஜகவைன் கான்ஷ்யாம் சிங் லோதி, சமாஜ்வாதியின் ஆசிம் ராஜாவை வீழ்த்தினார். ஆசம்கார்க் தொகுதியி பாஜகவின் தினேஷ் லால் யாதவ் அமோக வெற்றியை அறுவடைசெய்தார்.
சமாஜ்வாதி கட்சியின் கோட்டையிலேயே பாஜக கொடி பறந்தது உ.பி. அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் இந்த விஸ்வரூபம் தொடர்பாக என்னதான் அகிலேஷ் யாதவ் தரப்பு விமர்சனங்களை முன்வைத்தாலும் சமாஜ்வாதி கட்சிக்குள் இந்த பிரச்சனை ஓய்ந்துவிடவில்லை.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளையும் இன்று அகிலேஷ் யாதவ் அதிரடியாக கலைத்து உத்தரவிட்டார். அதாவது கட்சித் தலைவர் பதவி தவிர தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாக அமைப்புகள் என ஒட்டுமொத்த சமாஜ்வாதி கட்சி அமைப்புகளும் கலைக்கப்படுவதாக அகிலேஷ் யாதவ் தமது ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்ததை அக்கட்சி தலைமையால் எளிதாக எடுத்து கொள்ள முடியவில்லை. இதனால்தான் ஒட்டுமொத்த கட்சி கட்டமைப்பையே கலைத்துவிட்டார் அகிலேஷ் யாதவ் என்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications