சர்ச்சைக்குரிய வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கு: முஸ்லிம் தரப்பு மனு டிஸ்மிஸ்- அலகாபாத் உயர்நீதிமன்றம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வரணாசி ஞானவாபி மசூதி வெளிப்புற சுவற்றின் அருகே உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலையை வழிபட அனுமதி கோரிய வழக்கில் முஸ்லிம் தரப்பு தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே அமைந்து உள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இந்துக்களின் புனித தளமாக இந்த கோயில் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய ஞானவாபி என்ற மசூதியும் அமைந்து இருக்கிறது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவற்றின் அருகே சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது.

ஆண்டுக்கு 5 முறை இந்த சிலைக்கு பூஜை நடத்த அனுமதிகோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் ஜாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அம்மாதம் 17 ஆம் தேதிக்குள் ஆய்வை நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது. இதன் காரணமாக மசூதியில் கள ஆய்வு நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற ஆய்வில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற தோற்றம் ஒன்று இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிமன்றம் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதேசமயம், அது சிவலிங்கம் இல்லை என்றும், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்யும் தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்ட நீரூற்று போன்ற அமைப்பு என மசூதி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மசூதியில் தொழுகை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்தும் தனி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் உச்சநீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு வழிபாடு செய்ய அனுமதிகோரிய வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் முடிந்து நீதிமன்ற விசாரணை நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை 3.45 மணியளவில் இந்த வழக்கில் தனி நீதிபதி ஜேஜே முனிர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்து பெண்கள் வழிபட அனுமதி கோருவதை எதிர்த்த முஸ்லிம் தரப்பின் - Anjuman Intezamia Masjid Committee மனுவை டிஸ்மிஸ் செய்து நீதிபதி ஜேஜே முனிர் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications