Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநங்கையுடன் லிவ்-இன் உறவு.. மகனை தாக்கிய தந்தை! போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: திருநங்கையுடன் லிவ்-இன் உறவில் இருக்கும் ஆணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற நாடு என்கிற பெருமையை இந்தியா கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது இதனை ஒவ்வொரு நாளும் நாம் நிரூபித்து வந்திருக்கிறோம். அந்த வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜனநாயகத்தின் உட்சபட்ச கூறுகளை இந்தியா கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

Allahabad High Court orders police protection for Live-in relationship with transgender

அதாவது, திருநங்கையுடன் லிவி-இன் உறவில் ஆண் ஒருவர் இருந்து வந்திருக்கிறார். ஆனால், அந்த ஆணின் பெற்றோர், குறிப்பாக அவருடைய தந்தை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது மகனை சரமாரியாக தாக்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த தாக்குதல் மகனின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. எனவே, தனக்கு பாதுகாப்பு கோரி மகன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

வழக்கு விசாரணை நீதிபதி சௌமித்ரா தயாள் சிங் மற்றும் நீதிபதி டொனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த அமர்வு கொடுத்த தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.

"தனக்கு விருப்பமான நபருடன் வாழ்வது வாழ்க்கையின் ஒரு அங்கம். இதில் உள்ள தவறான எண்ணங்களை களையத்தான் நீதிமன்றங்கள், அரசியலமைப்புச் சட்டங்கள் இருக்கின்றன. மனிதர்களின் அடிப்படை அமைப்பில் இருந்து தோன்றக்கூடிய கருத்து மற்றும் ஆளுமையின் பன்முகத்தன்மை, வெவ்வேறு மனிதர்களை வெவ்வேறு தேர்வுகளை செய்ய வழிவகுக்கிறது. எனவே, சுதந்திரமான தேர்வுக்கான உரிமை என்பது சுதந்திரத்தின் ஆன்மா மற்றும் சுதந்திர சமுதாயத்தின் மிகவும் நேசத்துக்குரிய பண்பாகும்.

மனிதனாக இருப்பது என்பது உடல், உளவியல், உணர்ச்சி அல்லது வேறு எதுவாக இருந்தாலும், தனித்துவத்தை உள்ளடக்கியது மற்றும் ஊக்குவிக்கிறது. அரசியலமைப்பு ஜனநாயகம் எந்தவொரு மனித சமூகத்திலும் எழும் பல்வேறு தனித்துவத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதை உறுதியளிக்கிறது" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், "தற்போதுள்ள சட்டங்களின் எல்லைக்குள் மனிதர்கள் தங்கள் தனித்துவத்தை நிலைநிறுத்துவதைத் தடுக்கும் போது, ​​அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின் சொந்த பரிணாம செயல்முறையைத் தடுக்கிறது.

இந்த பின்னணியில், வழக்கின் உண்மைகள் மற்றும் மனுதாரர்களின் குறைகளை கவனத்தில் கொண்டு, மனுதாரர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை - சுதந்திரமான தேர்வு மற்றும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவருக்கான பாதுகாப்பை வழங்க உத்தரவிடுகிறோம்.

அதன்படி, மனுதாரர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்ததால், உடல் ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ, மனுதாரர்களையோ அல்லது அவர்களது சொத்துக்களுக்கு யாரும் தீங்கு விளைவிக்கக் கூடாது. இதற்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த உத்தரவு மாற்று பாலினத்தவர்களை புரிந்துகொள்ளுதல் என்பதோடு மட்டுமல்லாது, மனிதர்களின் சுய தேர்வுக்கான உரிமையை நிலை நிறுத்துவதாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+