Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பியில் 18 வயது பெண்ணை.. கூட்டு வன்புணர்வு செய்த கும்பல்.. சாலையில் வீசிவிட்டு சென்ற கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது உதவியாளரால் 18 வயது இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இது போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பயணம்

பயணம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சின்ஹாட்டில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது, "சம்பவத்தன்று மாலை சுமார் 6.45 மணியளவில் 18 வயது இளம்பெண் சின்ஹாட் தீயணைப்பு நிலையத்திலிருந்து சார்பாக்கிற்கு ஆட்டோ பிடித்துள்ளார். சின்ஹாட் பகுதியில் மாணவர் ஒருவருக்கு சொல்லிக்கொடுப்பதற்காக இங்கு வந்திருக்கிறார். இவ்வாறு இருக்கையில், ஆட்டோ ஒன்று சார்பாக செல்ல ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் பயணித்துள்ளார்.

ஆட்டோ

ஆட்டோ

ஆனால் ஆட்டோவில் ஓட்டுநருடன் உதவியாளர் ஒருவரும் இருந்துள்ளார். ஆனால் இளம்பெண் இது குறித்து சந்தேகம் கொள்ளவில்லை. இதனையடுத்து ஆட்டோ சில கி.மீ தொலைவில் வந்த பின்னர் தடம் மாறியுள்ளது. இதனை உணர்ந்துகொண்ட இளம்பெண் ஆட்டோவை ஏன் வேறுதிசையில் கொண்டு செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் டிரைவர் மற்றும் உதவியாளரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஏதோ தவறாக நடக்கிறது என்பதை அறிந்த இளம்பெண் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார்.

வன்புணர்வு

வன்புணர்வு

ஆனால் இதற்கு சற்றும் சளைத்து கொடுக்காத ஓட்டுநர் மற்றும் உதவியாளர், ஒரு கட்டத்தில் ஆள் அரவமற்ற பகுதியில் ஆட்டோவை நிறுத்தியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை எதிர்பாராத அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அவர்கள் அப்பெண்ணின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் சத்தம் எழுப்பினால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

காவல்துறையினர்

காவல்துறையினர்

இதனையடுத்து சுமார் 3 மணி நேரம் கழித்து அவர்கள் அப்பெண்ணை சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அவ்வழியாக நாங்கள் ரோந்து சென்று கொண்டிருந்தபோது எங்களை மறித்து விவரத்தை கூறினார். சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்கள் பெண்ணை மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தோம். இது குறித்து காவல்துறையில் அடுத்த நாள் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளோம்." என்று கூறியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுபோன்று பரவலாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+