லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. குண்டை தூக்கி போட்ட அனுப்பிரியா..ஜெர்க் ஆன பாஜக.. முஸ்லிம் வேட்பாளர் வேற..!

: பாஜகவுக்கு ஷாக் தந்துள்ளது அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (எஸ்)

Google Oneindia Tamil News

லக்னோ: உபி மாநில பாஜகவுக்கு இடிமேல் இடி விழுந்து கொண்டிருக்கிறது.. ஏற்கனவே அகிலேஷ் அங்கு விடாமல் விரட்டி கொண்டிருக்கும்போது, போதாக்குறைக்கு பாஜகவின் கூட்டணி கட்சியும் பாஜகவை கலங்கடித்து வருவது, பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

வடமாநிலங்களான பீகார், உபியில் சாதீய அழுக்கு நிறையவே படிந்துள்ளது.. இதற்கு காரணம், போதுமான மற்றும் பரவலான கல்வியறிவு அவர்களுக்கு கிடைக்காததுதான்.

 வருகிறது 5 கோடி 'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசி! - அனுமதி அளித்த இந்திய மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகம்! வருகிறது 5 கோடி 'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசி! - அனுமதி அளித்த இந்திய மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகம்!

சாதி ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை, சாதிய வன்முறைகள், இப்படி பல பெயர்களை வைத்துதான் அங்கு காலம் காலமாக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது..

 சாதிகள்

சாதிகள்

அதனால், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உத்திரபிரதேசம் கருதப்பட்டாலும், அம்மாநில தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சாதிகள்தான் முக்கிய பங்கை வகித்து வருகின்றன என்பது கசப்பான உண்மையாகும்... இந்த முறையும் சாதி, மத அரசியலை முன்னிறுத்தியே தேர்தலை கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.. யோகி ஆட்சியில் ஓபிசி மற்றும் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர் என்கிற குற்றச்சாட்டை வைத்து ஏற்கனவே 3 சீனியர்கள் கட்சியை விட்டு அகிலேஷ் கட்சிக்கு சென்றுவிட்டனர்..

 சாதி - மதம் மோதல்

சாதி - மதம் மோதல்

அதாவது, முன்னேறிய சாதி தலைவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கும் இடையே இந்த மோதல் மறைமுகமாகவே உருவாகி உள்ளதாக தெரிகிறது.. தாகூர், ராஜ்புட் போன்ற கட்சிகள் பாஜகவுக்கு பெரிதும் கை கொடுத்தாலும், சிறுபான்மையினர் ஆதரவை அக்கட்சியால் பெருவாரியாக பெற முடியாத சூழல் உள்ளது.. இதுபோக உட்கட்சி பூசலும் உபியில் பெருகி கொண்டிருக்கிறது.. மற்றொரு பக்கம் கூட்டணி கட்சிகளாலும் அதிருப்திகள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதனால் பெரிதும் அப்செட்டாகி இருப்பதுதான் அமித்ஷா தானாம்.

 பாஜகவுக்கு அதிர்ச்சி

பாஜகவுக்கு அதிர்ச்சி

இப்படிப்பட்ட சூழலில், பாஜகவுக்கு மேலும் ஷாக் தந்துள்ளது, அதன் கூட்டணி கட்சி... உபி மாநில பாஜகவுடன் அப்னா தளம் (எஸ்) கட்சி கூட்டணி வைத்துள்ள நிலையில், திடீரென பாஜகவை டேமேஜ் செய்துவிட்டது.. அதாவது தங்கள் கட்சிக்கும் பாஜகவுக்கும் நிறைய கொள்கை முரண்பாடுகள் இருக்கிறது என்று அந்த கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான அனுப்பிரியா படேல் பகிரங்கமாகவே சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக அவர் நிறைய விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளார்.

 இந்துத்துவா கொள்கை

இந்துத்துவா கொள்கை

"பாஜகவின் இந்துத்வா கொள்கைகளுக்கும் எங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.. நாங்க வேற, அவங்க வேற... பாஜகவிடமிருந்து வேறுபட்டவர்கள்.. சமூக நீதிக்காக எங்களது கட்சி போராடி வருகிறது. முஸ்லீம் வேட்பாளர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் கிடையாது.. இந்துத்வா, பாஜக பற்றி என்னிடம் நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள்.. அதனால்தான் சொல்கிறேன், அவங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.. எங்களுடைய கட்சி மதவாத கட்சியும் இல்லை.. மத அரசியல் செய்யும் கட்சியும் இல்லை.. முழுக்க முழுக்க சமூக நீதிக்காக போராடும் கட்சி." என்றார் அனுப்பிரியா.

 முஸ்லிம் வேட்பாளர்

முஸ்லிம் வேட்பாளர்

அதுமட்டுமல்ல, இந்த முறை தேர்தலில் முஸ்லீம் வேட்பாளரையும் அது அறிவித்துள்ளது.. காரணம், கடந்த 3 தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி இருந்தாலும், முஸ்லீம்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.. அதனால்தோன் இந்த முறை முதல் முறையாக முஸ்லீம் ஒருவருக்கு வாய்ப்பளித்துள்ளது... அவர் பெயர் ஹைதர் அலி.. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பேகம் நூர் பானுவின் பேரன்தான் இந்த ஹைதர் அலி.. சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆஸம் கானின் மகன் அப்துல்லா ஆஸம் கானுக்கு எதிராக, சுவார் என்ற தொகுதியில் ஹைதர் அலி நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. பாஜக செய்யாததை அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (எஸ்) அதிரடியாக செய்துள்ளது, உபி அரசியலில் மேலும் டென்ஷனை கூட்டி வருகிறது.

English summary
Our party is neither a religious party nor a party doing religious politics says Anupriya patel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X