உ.பி-இல் 300+ இடங்களில் வெல்வது உறுதி.. அடித்துக் கூறும் ஜேபி நட்டா.. என்ன காரணம் கூறினார் தெரியுமா
லக்னோ: அடுத்தாண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக நிச்சம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் எனத் தெரிவித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விவசாயிகள் போராட்டம் குறித்தும் முக்கிய தவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அடுத்தாண்டு நாடு முழுவதும் மொத்தம் 7 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 6 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது.
குறிப்பாக நாட்டின் பெரிய மாநிலம், பிரதமர் மோடியின் வாராணசி தொகுதி உள்ள மாநிலம் என்பதால் அனைவரது எதிர்பார்ப்பும் உத்தரப் பிரதேசத்தின் மீதே உள்ளது..

உத்தரப்பிரதேசம்
கடந்த 2017இல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப் பெரியளவில் வென்றது. மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களை பாஜக கைப்பற்றிய நிலையில், உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டார். அதேபோல அடுத்து 2024 மக்களவை தேர்தலிலும் உத்தரப் பிரதேசம் தான் பாஜகவின் டாப் குறியாக உள்ளது. எனவே, மக்களவை தேர்தலையும் உபியில் ஆளும் கட்சியாக இருந்து எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.

பாஜக
கொரோனா 2ஆம் அலையை மோசமாகக் கையாண்டது தொடர்பாக யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியை ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது பாஜக. இந்தச் சூழலில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து ஆஜ் தக் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, "பாஜக தேர்தலுக்கு மட்டுமின்றி அனைத்திற்கும் எப்போதும் தயாராகவே உள்ளது. கொரோனா காலத்தில் மற்ற கட்சிகள் வெளியே வரக்கூடத் தயங்கிய போது, மக்களுக்காக பணியாற்றிய ஒரே கட்சி பாஜக தான்.

எதிர்க்கட்சி ஆளும்கட்சி
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, மக்கள் பிரச்சினைகளைத் தொடக்கம் முதலே எழுப்புவோம். நாங்கள் ஆளும்கட்சியாக இருக்கும் போது, அதே மக்கள் நலனை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உபி-ஐ பொறுத்தவரை யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்றது முதலே நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளோம்.

பூத் கமிட்டி
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் தலா 20 தலித் மக்கள், 20 பெண்கள், 20 ஓபிசி மக்கள், 20 இளைஞர்கள், 20 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி அமைக்க வேண்டும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 10.40 லட்சம் வாக்குச் சாவடிகள் உள்ளன, அதில் 8.5 லட்சம் வாக்குச் சாவடிகளுக்கு பூத் கமிட்டியை அமைத்துவிட்டோம். லட்சத்தை எட்டியுள்ளோம். 10.40 லட்சத்துக்கு எடுக்க வேண்டும். யோகி அதித்யநாத் தலைமையும், மோடியின் ஆசீர்வாதமும் இருப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் வேலை செய்கின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி உடன் நான் இதற்கு முன்பும் இணைந்து பணியாற்றியுள்ளான். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் அவர் எனக்கு வழிகாட்டுகிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை அவர் வழங்குவார். ஒவ்வொரு நிமிடத்தையும் தேசத்திற்காக நாம் எப்படிப் பயன்படுத்த முடியும், இளைஞர்கள் தங்கள் பாதையிலிருந்து விலகிச் செல்லும் போது அவர் மிகவும் வேதனைப்படுவார். ஒரு வாக்குறுதி அளிக்கும் முன்பு 10 முறை யோசியுங்கள் என்பார். ஆனால் வாக்குறுதி அளித்துவிட்டால் அதை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அவரது எதிர்பார்ப்பு. அவருடன் இருந்த போது தான் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

அகிலேஷ் யாதவ்
பாஜக ஆட்சியில் கரும்பு உற்பத்தி அதிகரித்துள்ளது, இதை நாங்கள் விவசாயிகளிடம் கொண்டு செல்வோம். விவசாயிகளும் உறுதியாக உள்ளனர். அகிலேஷ் யாதவ் தேவையில்லாமல் ஜின்னா குறித்துப் பேசி வருகிறார். இது அவரது மனநிலையைக் காட்டுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக அவர் எப்படி தேசவிரோத சக்திகளைப் புகழ்ந்து பேசுகிறார் என்பதை இது காட்டுகிறது. இந்தியப் பிரிவினையில் ஜின்னாவின் பங்கை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வோம். அவர் ஜின்னாவை இரும்பு மனிதன் பட்டேலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் வாக்குகளுக்காகத் தேசிய நலன்களைக் கூட சமரசம் செய்து கொள்வார்கள், ஆனால் நாங்கள் அப்படியல்ல.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம் என்பது தேசியளவில் நடைபெறும் போராட்டம் இல்லை. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் தொடங்கிய பிறகு நடைபெற்ற தேர்தல்களிலும் கூட நாங்கள் நல்ல வெற்றியைப் பதிவு செய்துள்ளோம். விவசாயிகள் இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம் கேட்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் பாஜக தான் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என்று

300+ இடங்கள்
பிரியங்கா காந்தி யாரோ எழுதித் தருவதை அப்படியே பேசுகிறார். எனவே அவரை தலைவர் என்றெல்லாம் கூற முடியாது. தேர்தலுக்கு முன்பு திடீரென இவர்கள் கோவில்களுக்குச் செல்கின்றனர். இதைப் பார்க்கச் சந்தோசமாகத் தான் உள்ளது. பாஜக இந்தத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெறும்" என்றார்.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி












Click it and Unblock the Notifications