பட்டையை கிளப்பிய பாஜக.. உ.பி உள்ளாட்சி தேர்தலின் ரிசல்ட்டை பாருங்க! அச்சச்சோ காங்கிரஸின் பரிதாப நிலை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 4 மேயர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் 17 மாநகராட்சி ஆணையர், 199 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் 544 நகர் மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 4 மற்றும் 11ம் தேதியென இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 4.32 கோடி வாக்காளர்கள் கொண்ட இம்மாநிலத்தில் 53 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இரண்டாவது முறை கைப்பற்றிய நிலையில் உள்ளாட்சி தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு நீண்டிருந்தது.

இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்படி 10 மாநகராட்சி ஆணையர் பதவிகளை பாஜக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பாஜக தற்போது 13 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மீதமுள்ள நான்கு இடங்களையும் பாஜக வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது. அதேபோல அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தலா ஒரு இடத்தை கைப்பற்றும் என்றும், மீதமுள்ள இடங்களில் கடும் போட்டி நிலவும் எனவும் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டது.
ஆனால் இக்கட்சிகள் எந்த மேயர் தொகுதியகளிலும் முன்னிலையில் இல்லை. காங்கிரஸை பொறுத்த அளவில் அது சீனில் இல்லாமல் கடைசியாக இருக்கிறது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையாக முன்னிலையில் இருக்கிறது. இதனை கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த தேர்தலை பொறுத்த அளவில் பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்ததது என்கவுன்ட்டர் விஷயம்தான்.
மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 183 குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது பாஜக மீதும் யோகி மீதும் பெரும் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை கடந்து பாஜக தற்போது வெற்றிவாகை சூட தயாராகி வருகிறது. மட்டுமல்லாது இந்த தேர்தல் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டதால் அனைத்து கட்சிகளும் தங்கள் முழு பலத்தை பயன்படுத்தி களத்தில் பணி செய்தன. ஆனால் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு இந்த தேர்தலில் பாஜகவை வெற்றியை நோக்கி நகர்த்தியுள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 199 ஊராட்சி மன்ற தொகுதிகளில் பாஜக சில இடங்களை லக்னோ, பரேலி, மொராதாபாத், மதுரா உள்ளிட் இடங்களில் மேயர் பதவியை கைப்பற்றி 88 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. அதேபோல சமாஜ்வாடி கட்சி 36 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 22 இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது. இதர கட்சிகள் 48 இடங்கிளல் முன்னிலையில் இருக்கின்றன. காங்கிரஸை பொறுத்த அளவில் வெறும் 5 இடங்களில் மட்டும்தான் முன்னணியில் இருக்கிறது.
இதே மொத்தமுள்ள 544 நகராட்சி தொகுதிகளில் 167 இடங்களில் பாஜக முன்னணியில் இருக்கிறது. சமாஜ்வாடி 73 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 34 இடங்களிலும் இதர வேட்பாளர்கள் 152 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் மட்டுமே முன்னணியில் இருக்கிறது.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications