லதா மங்கேஷ்கர் மறைவால் உ.பி. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு!
லக்னோ: இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவால் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த பாஜக தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான டெல்லி போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஜாட் சமூகத்தினரும் முஸ்லிம்களும் அதிகம்.
மேற்கு உ.பி.யில் பெரும்பான்மையினராக ஜாட், முஸ்லிம்கள் உள்ளனர். 2013-ம் ஆண்டு முசாபர்நகர் மதமோதலின் போது பிரிந்து கிடந்த இரு சமூகங்கள் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்தனர். இப்பகுதியில் பாஜக அதிக இடங்களைப் பெறுவதற்கு போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

ஜாட் வாக்குகள்
அதேநேரத்தில் ஜாட், முஸ்லிம்கள் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி நம்பிக்கையோடு உள்ளது. ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடனான கூட்டணி, ஓபிசி தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தது உள்ளிட்டவைகள்தான் அகிலேஷ் யாதவ் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன.

அமித்ஷா பிரசாரம்
இதனை சமாளிக்கும் வகையில் ஜாட் சமூகத் தலைவர்களை அமித்ஷா ஏற்கனவே சந்தித்து பேசியிருந்தார். அப்போது, முகலாயர்களை எதிர்த்து போராடியவர்கள் ஜாட் சமூகத்தினர்... தங்களுக்கும் மேலாக இந்த தேசத்தின் பாதுகாப்பு நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அப்போது அமித்ஷா ஜாட் தலைவர்களிடம் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மேற்கு உ.பி.யில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்கிறார்.

பாஜக தேர்தல் அறிக்கை
முன்னதாக லக்னோவில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா இன்று வெளியிட உள்ளார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அனுராத் தாக்கூர், தர்மேந்திர பிரதான், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையிலும் ஜாட் சமூகத்தினர் வாக்குகளைக் கவரும் அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

கருத்து கணிப்புகள்
பொதுவாக கருத்து கணிப்புகளில் மேற்கு உ.பி.யில் பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்த பகுதியில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்கின்றன கணிப்புகள்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications