ஆசன வாயில் லத்தியை சொருகி எலெக்ட்ரிக் ஷாக்.. பசுவதை புகாரில் இஸ்லாமியரை வதைத்த உபி போலீஸ்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பசுவதை வழக்கில் கைதான நபரின் ஆசனவாயில் லத்தியை சொறுகி எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து காவல் நிலையத்தில் போலீசார் துன்புறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் 22 வயது இஸ்லாமிய இளைஞரை போலீசார் பசுவதை வழக்கில் கைது செய்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கக்ரலா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பகுதி நேரமாக காய்கறி விற்பனை செய்து வந்திருக்கிறார்.

இளைஞர் கைது
இந்த நிலையில் கடந்த மே 2 ஆம் தேதி அவர் பசுவதையில் ஈடுபட்டதாக அலபூர் காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோத காவலில் வைத்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் சத்ய பால் தலைமையிலான 4 காவலர்களுடன் சேர்ந்து வெளிநபர்களும் இளைஞரை தாக்கியுள்ளனர்.

வலிப்பு நோயால் பாதிப்பு
இது தொடர்பாக இளைஞருடைய அண்ணன் மனைவி கூறுகையில், "2 நாட்களாக குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி போலீசார் கொடூரமாக வதைத்துள்ளனர். தவறான நபரை கைது செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த பிறகு ரூ.100 பணத்தை கொடுத்து வீட்டில் வந்து விட்டனர். அன்றிலிருந்து இவருக்கு வலிப்பு ஏற்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை நிலைமை மோசமான பிறகே மருத்துவமனையில் அனுமதித்தோம்." என்றார்.

லத்தியை சொருகி எலெக்ட்ரிக் ஷாக்
போலீசார் காவல் நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைத்திருந்தபோது இளைஞரின் ஆசனவாயில் லத்தியை சொருகி துன்புறுத்தியதும், குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள சொல்லி எலெக்ட்ரிக் ஷாக் வைத்து கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இளைஞரை பரிசோதித்த மருத்துவர், எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்ததால் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

பணியிடை நீக்கம் செய்ய நடவைக்கை
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில் பொய் வழக்கு பதிந்தது மற்றும் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பிரவீன் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இளைஞரை தாக்கிய போலீசாரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்துவதற்கான வேலைகள் நடத்து வருவதாக உறுதியளித்துள்ள அவர், இளைஞருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications