உ.பி.: திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன-4 பேர் பலி; 22 பேர் படுகாயம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உட்பட மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. தடம் புரண்ட இந்த 12 பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய தகவல்களின்படி இந்த ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சண்டிகரில் இருந்து அஸ்ஸாமின் திப்ரூகர் செல்லக் கூடியது சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் (15904). இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சண்டிகரில் இருந்து நேற்று இரவு 11.35 மணிக்குப் புறப்பட்டது. அஸ்ஸாமின் திப்ரூகரை நாளை மறுநாள் சென்றடையும்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதில் 4 ஏசி பெட்டிகளும் அடங்கும். இந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய தகவல்களின் படி இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications