பசுமை பொங்கும் உத்தரப் பிரதேசம்! 5 கோடி மரக்கன்றுகளை நட திட்டம்.. யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்
லக்னோ: இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பேரிடர்களிலிருந்து மக்களை காப்பாற்றவும் 5 கோடி மரங்களை நடும் இயக்கத்தை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
மரம் வளர்ப்பு பிரச்சாரம்-2023 மற்றும் அமிர்த ஸ்தம்பத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்தி பின்னர் பேசிய யோகி ஆதித்யநாத், "இந்த மரங்கள் மக்களை இயற்கையுடனும் கடவுளுடனும் இணைக்கும் ஊடகமாக மாறும். இந்த திட்டத்தில் ஆலமரம், அரச மரம் மற்றும் குருகிலை மரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். அதேநேரம் இயற்கையோடு விளையாடும் போது அதன் பாதகமான விளைவுகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மாதத்திற்குள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பரவலான உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்படுகிறது. இயற்கையின் சீற்றம் நேற்று மீண்டும் ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்டில் அழிவை ஏற்படுத்தியது. இது கால மாற்றத்தின் விளைவுதான். பெரும்பாலான இடங்களில் மண் அரிப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்பட வேண்டும். மரங்கள் வளர்க்கப்படுவதன் மூலம் மண் அரிப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.
இது மட்டுமல்லாது மரம் வளர்த்தல் என்பது இயற்கையை புரிந்துக்கொள்ள உதவும். இயற்கையை புரிந்துகொள்ளுதல் என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் நமக்கு மிக முக்கியமானதாகும். இயற்கையை பாதுகாத்தால் பூமி பேரழிவுகளிலிருந்து விடுபடும். மனித குலத்திற்கு கடவுளின் அருள் தொடரும். நாம் மரம் நடும் காலகட்டங்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த காலங்களாகும். இந்த நாட்களில் ஒவ்வொரு இந்தியரும் சில தீர்மானங்களை எடுத்துக்கொண்டு அதற்காக உறுதிமொழி ஏற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications