Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாஸ்ட்புட்" எடுத்தால் உயிர் போகும்.. பீட்சா - பர்ஹரால் 11ம் வகுப்பு மாணவி பலி - எய்ம்ஸ் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி தொடர்ந்து பீட்சா, பர்ஹர் என்று ஃபாஸ்ட்புட் சாப்பிட்டு வந்த நிலையில் குடலில் ஓட்டை விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் தான் எய்ம்ஸ் டாக்டர்கள் பொதுமக்களுக்கு முக்கிய வார்னிங் செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ளஆப்கன் மொஹல்லா பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலிகான். இவரது மனைவி பெயர் சாரா கான். இந்த தம்பதியின் மூத்த மகள் பெயர் மரியா (வயது 23). 2வது பிறந்த மகன் பெயர் அவான். 3வது பிறந்த மகளின் பெயர் அஹனா (வயது 16). அஹனா 11ம்வகுப்பு படித்து வந்தார்.

class-11th-girl-student-died-after-ill-due-to-excessive-consumption-of-fast-foods-including-pizza-a

இந்நிலையில் தான் நவம்பர் 28 ம் தேதி அஹனாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவர் பாதிக்கப்பட்டார். வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

இதையடுத்து குடும்பத்தினர் அஹனாவை அம்ரோஹா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மொராடாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அஹனாவுக்கு குடல் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் வயிற்றில் தேவையில்லாமல் நீர் கோர்த்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரியாஸ் ஆபரேஷன் செய்தார். வயிற்றில் இருந்து 7 லிட்டர் திரவம் அகற்றப்பட்டது. இதனால் அஹனா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார். இருப்பினும் முற்றிலுமாக குணமடையவில்லை.

இதனால்அவரது உறவினர் சாஜித் கானல், அஹனாவை மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது குடல் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பது தெரியவந்தது. அதனை சரிசெய்ய சிகிச்சைஅளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. நேற்று முன்தினம் அஹனா இறந்தார்.
இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் உயிரிழந்ததாக எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் அஹனாவின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே தான் அஹனாவின் இறப்பின் பின்னணி குறித்து திடுக்கிட வைக்கும் தகவலை எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்துள்னளர். அதாவது அஹனாவுக்கு சிறுவயது முதலே ஃபாஸ்ட் புட் சாப்பிடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பீட்சா, பர்ஹர் உள்பட பிற ஃபாஸ்ட் புட் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிட மறுத்துள்ளார். பல ஆண்டுகளாக ஃபாஸ்ட்புட் சாப்பிட்டு வந்ததால் அஹனாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்துள்ளது.

அதேபோல் அம்ரோஹாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்பி சிங்கும் பெற்றோர்களுக்கு வார்னிங் செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்கு ஃபாஸ்ட்புட் வழங்குவதை நிறுத்த வேண்டும். ஃபாஸ்ட்புட் அதிக காரம், அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது. அதேபோல் குளிர்பானம், சிப்ஸ் மற்றும் பிரெஞ்ச் ஃபிரைஸ் உள்ளிட்டவை பசியை தூண்டிவிடாது. இதனால் உரிய நேரத்தில் சாப்பிடாமல் உடல் வீக்காக மாறும். எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ரெகுலராக ஃபாஸ்ட்புட் சாப்பிட அனுமதிக்க கூடாது'' என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அஹானாவின் உறவினர் சஜித் கான் கூறுகையில், ‛‛ அஹானாவுக்கு சிறுவயதிலிருந்தே பாஸ்ட்புட் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. வீட்டில் சமைத்த உணவை விட அவள் சவ்மின், மேகி, பீட்சா மற்றும் பர்ஹர்களை விரும்பி சாப்பிட்டு வந்தாள். பொட்டலங்களில் வரும் உணவு பொருட்களையும் அதிகமாக சாப்பிடுவாள். அவளது உணவு பழக்க வழக்கத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தது எங்கள் தவறு தான். இப்போது அவள் இறந்துவிட்டாள்'' என்று கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் அம்ரோஹாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+