பஞ்சாப் காங்.-ல் அக்கப்போர்- சீட் கிடைக்காத கோபத்தில் முதல்வரின் சகோதரர் சுயேட்சையாக போட்டி!
லக்னோ: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு தராதால் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர்சிங் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. முதல் கட்டமாக 86 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் 9 பேர் பெண்கள். அதாவது பெண்களுக்கு 10% இடங்களை காங்கிரஸ் ஒதுக்கி உள்ளது.

சரண்ஜித் சிங் சன்னி, சித்து
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார். கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அவரது உறவினர் சந்தீப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாட்டியாலா தொகுதி?
பாட்டியாலா தொகுதி, முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கின் கோட்டை. அங்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்கிற குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ் மேலிடம். பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒருவருக்குதான் போட்டியிட வாய்ப்பு தருவது என காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது.

சுயேட்சையாகப் போட்டி
இதனால் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர் சிங்குக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அரசு சீனியர் மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய மனோகர்சிங் தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் ராஜினாமா செய்திருந்தார். பாசி பதானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடவும் அவர் விரும்பினார். தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மனோகர்சிங் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார். பஞ்சாப் துணை சபாநாயகர் அஜய்சிங்குக்கும் இந்த தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறாரா? என்பது தெரிவிக்கப்படவில்லை.

முதல்வர் வேட்பாளர் குறித்து சித்து
பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாநில தலைவர் நவ்ஜோத்சிங் சித்து, பஞ்சாப் முதல்வரை டெல்லி மேலிடம் தீர்மானிக்க முடியாது; பஞ்சாப் மக்களே தீர்மானிப்பார்கள் என காட்டமாக கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications