காங்கிரஸின் இரும்பு கோட்டையா ரேபரேலி? களம் காணப் போவது நேரு குடும்பத்து இளவரசி பிரியங்கா காந்தி?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் கோட்டையாக இருப்பது ரேபரேலி தொகுதி. இத்தொகுதியில் நேரு குடும்பத்தின் வாரிசு பிரியங்கா காந்தி, இம்முறை காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகளில் உள்ளன. இதில் ரேபரேலி மிக முக்கியமான தொகுதி. ரேபரேலி தொகுதியில் ரேபரேலி, ஹர்சந்த்பூர், சரேனி உட்பட மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ள்ன.

ரேபரலி லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்பத்தின் மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியும் அமேதியும் நேரு குடும்பத்தின் சொந்த தொகுதி என சொல்லும் அளவுக்கு செல்வாக்கு கொடி கட்டிப் பறந்த காலமும் இருந்தது.
1952-ம் ஆண்டு நாட்டின் முதல் லோக்சபா தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஃபெரோஸ் காந்தி. இவர் நேருவின் மருமகன்.. இந்திரா காந்தியின் கணவர். 1957-ம் ஆண்டு தேர்தலிலும் ஃபெரோஸ் காந்தியே வென்றார். 1960, 1962-ல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்பி சிங், ரேபரேலியில் வென்றார்.
1967, 1971-ல் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி அம்மையார் வெற்றி பெற்றார். 1971-ல் இந்திரா காந்தி அம்மையார் ரேபரேலியில் பெற்ற வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்திராவின் வெற்றி செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புதான் இந்திய ஜனநாயகத்தின் மிக மோசமான இருண்ட பக்கமான, எமர்ஜென்சி எனும் அவசர நிலை பிரகடனத்தை இந்திரா காந்தி அமல்படுத்த காரணமாகவும் இருந்தது.
இதே ரேபரேலியில் 1977-ல் ராஜ் நாராயணன் வென்றார். ஆனால் 1980-ல் மீண்டும் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்றார். பின்னர் ரேபரேலி தொகுதி எம்பி பதவியை இந்திரா ராஜினாமா செய்தார். தெலுங்கானாவின் மேடக் தொகுதி எம்பியாகவே மரணிக்கும் வரை பதவி வகித்தார் இந்திரா காந்தி. 1980-ம் ஆண்டு இடைத்தேர்தல், 1984-ம் ஆண்டு தேர்தலில் நேரு குடும்பத்தின் அருண் நேரு வெற்றி பெற்றார். 1989, 1991-ல் காங்கிரஸின் ஷீலா கவுல் வென்றார்.
1996, 1998 தேர்தல்களில் பாஜக ரேபரேலி தொகுதியில் காவி கொடி பறக்கவிட்டது. 1999-ல் காங்கிரஸின் சதீஷ் சர்மா மீண்டும் காங்கிரஸின் மூவர்ண கொடியை ரேபரேலி தொகுதியில் பறக்கவிட்டார்.
1999-ம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியில் இந்திராவின் மருமகள் சோனியா காந்தி தொடர்ந்து எம்பியாக வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, 534,918 (55.80%) வாக்குகளைப் பெற்று அபார வெற்றியைப் பெற்றார். பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங் 367,740 வாக்குகளைப் பெற்றார். சோனியா காந்தி அம்மையார் 1,67,178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை அறுவடை செய்தார்.
தற்போது சோனியா காந்தி அம்மையார், ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இதனால் ரேபரேலி தொகுதியில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த யார் வேட்பாளராக களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மகளுமாகிய பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications