தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை குடித்த பக்தர்கள் .. AC மிஷின் அருகே திடீர்னு கூட்டம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்திலுள்ள ஒரு கிருஷ்ணர் கோவிலில் நடந்துள்ளது.. இதைப்பார்த்த நெட்டிசன்கள், பல்வேறு கருத்துக்களை விடாமல் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

அறிவியலுக்கும், தொழில்நுட்பத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லாத வகையில், பாஜக தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

ac water uttar pradesh


சமீபத்தில்கூட, அசாம் மாநில சில்சார் தொகுதி பாஜக எம்எல்ஏ திலீப் குமார்பால், சில்சாரில் நிகழ்ச்சியில் பேசியபோது, "பகவான் கிருஷ்ணர் இசைக்கும் தனித்துவமான புல்லாங்குழல் இசையைப்போல இசைத்தால், அதை காதால் கேட்கும் பசுக்கள் வழக்கத்தைவிட கூடுதலாகப் பால் கறக்கும். இது நவீன விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று பேசியிருந்தார்.

பசுமாடு:
அதேபோல, மற்றொரு பாஜக அமைச்சர், "ரத்த அழுத்த நோயாளிகள், தினமும் காலை மாலை பசுமாட்டை தடவிக்கொடுத்து அதற்கு உணவிட்டு வந்தால், 10 நாட்களில் அவர்களின் 20 எம்.ஜி அளவு மாத்திரைகள், 10 எம்.ஜி என குறைந்துவிடும்.. மாட்டு தொழுவத்தில் படுத்திருந்தால், ஆபத்தான புற்றுநோயும் குணமாகிவிடும், பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்" என்றெல்லாம் பேசியிருந்தார்.

அதேபோல, சத்தீஸ்கர் பாஜக எம்பி போஜ்ராஜ் நாக் 15 நாட்களுக்கு முன்பு பேசும்போது, "ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட அரசு திட்டங்களில் நிலவும் சிக்கல்களை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்..

அலட்சியம்: அதில், "நான் இந்த திட்டத்தை பற்றி ஏற்கனவே சொன்னேன்.. மறுபடியும் சொல்கிறேன். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை அலட்சியத்தால் சிலர் நாசப்படுத்துகின்றனர்.. இனியும் அவர்கள் இதுபோலவே, என் பேச்சுக்கு செவிசாய்க்காவிட்டால், அவர்களின் பெயரில் எலுமிச்சை பழம் வெட்டப்படும்" என்று சாபம் விட்டு பகீரை கிளப்பியிருந்தார்.

பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் ஒவ்வொருமுறையும் சர்ச்சையை கிளப்பிவரும்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. சோஷியல் மீடியாவிலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.

தினந்தோறும்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது.. இந்த கோவிலின் பெயர், பாங்கே பிகாரி என்பதாகும்.. பிருந்தாவனில் இருக்கும் இந்த கோவிலை பார்க்க ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருவது வழக்கமாகும்..

அந்த வகையில், கோவிலுக்கு வந்த சில பக்தர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி தண்ணீரிலிருந்து வழியும் தண்ணீரை மடக் மடக் என கைகளில் ஏந்தி குடிக்க துவங்கினார்கள்.. கோயிலுக்குள் ஏசி மிஷின் வைக்கப்பட்டுள்ளது.. இதிலிருந்து வெளியேறும் தண்ணீரை, "தீர்த்த நீர்" என்று நினைத்து குடித்துள்ளனர்.

பிளாஸ்டிக் கப்: இது தொடர்பான வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவில், அவர்களின் கைகளில் பிளாஸ்டிக் கப் உள்ளது.. அந்த கப்பில், கோவிலில் இருந்து வரும் தண்ணீரை குடிக்கின்றனர்..

அந்த நேரத்தில் Vlog எடுத்துக்கொண்டிருந்த ஒரு யூடியூபர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவர்களிடம் சென்று, "இது சாமியின் பாதத்தில் இருந்து வரும் புனித நீர் கிடையாது.. ஏசியில் இருந்து வரும் தண்ணீர் என்கிறார். ஆனால் அதை யாருமே பொருட்படுத்தாமல், அந்த தண்ணீரை தலையிலும் தெளித்துக்கொண்டு செல்கிறார்கள்..

அதிர்ச்சி: இந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. சமூக வலைதளங்களின் வளர்ச்சியானது, சிலசமயம் நம்மை ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்குள்ளாக்கவும் செய்துவிடுகின்றன..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+