அதென்ன.. பாஜக கொடி தேசிய கொடியை விட மதிப்பு மிக்கதா.. காங்கிரஸ் கிடுக்கிப்பிடி.. வெடித்த சர்ச்சை
கல்யாண்சிங் இறுதிச்சடங்கில் தேசிய கொடியை பாஜக இழிவுபடுத்தியதா
லக்னோ: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யான் சிங் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது, அவரின் உடல் மேல் விரிக்கப்பட்ட தேசிய கொடியின் மீது பாஜகவின் கொடி போர்த்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும், உபி மாநில முன்னாள் முதலமைச்சருமான கல்யாண் சிங், உடல் நலக்குறைவால் டெல்லியில் காலமானார்... அவருக்கு வயது 89 வயதாகிறது.
சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்தது. இதனால் கடந்த ஜூலை 4ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அது பலனின்றி இறந்தார்..

பாஜக தலைவர்கள்
கல்யாண்சிங் மறைவுக்கு பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், கல்யாண் சிங்கின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.. நேற்று காலை, பிரதமர் மோடி லக்னோவுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்... அதேபோல உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கல்யாண்சிங்
அப்போது முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஆளுநராக பதவி வகித்தவர் என்பதால், கல்யாண் சிங்கின் உடல் மீது, தேசியக் காெடி போர்த்தப்பட்டிருந்தது.. பாஜக தேசிய தலைவர் நட்டா அஞ்சலி செலுத்தும்போது, கல்யாண் சிங் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை பாதி அளவில் மறைக்கும் வகையில், பாஜக கொடி போர்த்தப்பட்டிருந்தது... இது தொடர்பான போட்டோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கல்யாண்சிங்
தேசியக் கொடியை விட மதிப்புமிக்க கொடியா பாஜகவின் கொடி? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான போட்டோவை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து பாஜகவின் தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.. தேசிய கொடியை பாஜக அவமதித்துவிட்டதாக புகார் சொல்லியும் வருகின்றனர். இதுகுறித்து "நவீன இந்தியாவில் இந்திய கொடியின் மீது கட்சி கொடியை வைப்பது சரியா?" என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீவிவாஸ் பிவி கேள்வி எழுப்பினார்...

போட்டோ
அதேபோல, "தேசத்திற்கு மேலே கட்சி... மூவர்ண கொடிக்கு மேலே கொடி... வழக்கம் போல் பாஜக, வருத்தம் இல்லை, மனந்திரும்புதல் இல்லை, வருத்தமில்லை, வருத்தமில்லை" என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் கன்ஷ்யம் திவாரி ட்வீட் செய்துள்ளார். இந்த விஷயத்தை காங்கிரசும் விடுவதாக இல்லை.. தேசிய கவுரவத்தை அவமதிப்பதை தடுக்கும் சட்டத்தின் பிரிவுகளை எடுத்து சொல்லி வருகிறது.. இதனிடையே, கல்யாண் சிங்கின் நினைவாக மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்... மேலும் இன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications