அசத்தல்.. 1 கை, 2 கால், 2 விரல்களை இழந்த நபர், யுபிஎஸ்இ தேர்வில் சாதனை.. மலைத்து பார்க்கும் இந்தியா
லக்னோ: கனவு என்பது தூங்கும்போது வருவதல்ல, தூங்கவிடாமல் செய்வதுதான் என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாய் சமீபத்தில் நடந்து முடிந்த குடிமைப் பணி தேர்வில், இரண்டு கால்கள், ஒரு கை, மற்றொரு கையில் இரண்டு விரல்கள் ஆகியவற்றை இழந்த இளைஞர் ஒருவர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
லட்சியத்தை நோக்கிய பயணத்தில் கண்களுக்கு இலக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்பார்கள். அதுபோல ஐஏஎஸ் அதிகாரி ஆவதுதான் தன்னுடைய இலக்கு என்று நிர்ணயித்து அதை நோக்கிய பயணத்தில் தீவிரமாக உழைத்தவர்தான் உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ராஜேஷ் திவாரி. இவர் தனது வாழ்க்கையில் சந்திக்காத பிரச்னையே கிடையாது. ஆனாலும் தடைகளை உடைத்தெறிந்து சாதனை படைத்திருக்கிறார்.

மெயின்புரி மாவட்டத்தின் குராவாலி தாலுகா மொஹல்லா கர்னாஜ்பூரில் கடந்த 1996ம் ஆண்டு பிறந்தவர்தான் இந்த ராஜேஷ். இவர் மற்ற மாணவர்களை போல அதிக கவனிப்பு திறன் கொண்டிருந்தார். இதில் இவரை மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டிய அம்சம் எதுவெனில், தான் கவனித்ததை அப்படியே திரும்ப எழுதும் பண்புதான். எனவே தொடக்க கல்வியிலிருந்து இவருக்கு கல்வி மீது அதீத ஈடுபாடு இருந்தது. அப்போதே ராஜேஷ் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதை பிக்ஸ் செய்துக்கொண்டார்.
பின்னர் கல்லூரி படிப்பும் இயல்பாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போதுதான் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி இவர் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது காஜியாபாத்தில் இந்த ரயில் விபத்தில் சிக்கியது. இதில் ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அப்படி மீட்கப்பட்டவர்களில் ராஜேஷூம் ஒருவர். ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். ஆனால் இந்த விபத்தில் இவரது இரண்டு கால்கள், இடது கை, வலது கையில் 2 விரல்கள் ஆகியவற்றை இவர் முற்றிலுமாக இழக்க நேர்ந்தது. இது பெரும் துயரமான சம்பவம். விபத்தில் உயிர் பிழைத்திருப்பது அரிது எனில், இத்தனை இழப்புக்கு பின்னரும் மனம் தளராமல் போராட்டத்துடன் வாழ்வது என்பது மற்றொரு சவால். இந்த இழப்புகளால் மனம் தளர்ந்தவர்கள் விரக்தியடைந்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட கதைகள் ஏராளம்.
ஆனால் ராஜேஷ் இந்த வழியை தேர்ந்தெடுக்கவில்லை. இப்போது அவரால் ஓடியாடி வேலை செய்ய முடியாது, விளையாட முடியாது, உடல் உழைப்பை பயன்படுத்தி அவரால் எதையும் செய்ய முடியாது. எனவே அவர் தன்னுடைய சிறு வயது கனவை மீண்டும் நினைவுபடுத்தி பார்த்தார். அது அவரது நெஞ்சில் சிறு தணலாக இருந்தது. அதை எடுத்து பத்திரப்படுத்தி மனம் எனும் பெரும் காட்டில் வைத்தார். காடு கொழுந்து விட்டு எரிந்தது. இது எதிர்மறையான எண்ணங்கள் அனைத்தையும் சாம்பலாக்கியது.
எனவே தீவிரமாக படிக்கத் தொடங்கினார். படித்தார்.. படித்தார்.. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை படித்துக்கொண்டே இருந்தார். எல்லாவற்றையும் படித்தார். ஒரு கட்டத்தில் அவர் படித்ததை எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்கான வாய்ப்புதான் யுபிஎஸ்சி தேர்வு. இதற்கிடையில் மற்றொரு சோகமான தருணம் இவர் உறுதிக்கு சவாலை ஏற்படுத்தியது. அதாவது ராஜேஷின் மூத்த அண்ணன் இறந்துவிட்டார். இவருக்கு மொத்தம் 2 அண்ணன்கள் ஒரு தங்கை இருக்கின்றனர். அப்பா தையல் தொழிலாளி.
எனவே குடும்பத்தின் மொத்த பாரமும் இவர் மீது விழுந்தது. ஏற்கனவே கைகால்களை இழந்த சோகம், இப்போது அண்ணனும் உடன் இல்லை. மறுபுறம் வறுமையில் தவிக்கும் குடும்பம், படிக்க வைக்க ஏங்கும் தங்கை என சூழல் நெருக்கியது. எல்லாவற்றையும் புரிந்து படித்தார். இவரது உழைப்பு இவரை கைவிடவில்லை. சமீபத்தில் நடைபெற்ற குடிமைப் பணி தேர்வில் பங்கேற்றிருந்த அவர் தேசிய அளவில் 971வது ரேங்க் பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளார். இவர் தேர்வில் வெற்றியடைந்திருப்பது மாவட்டத்திற்கே பெருமை சேர்த்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த வெற்றி அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications