கொலை, பலாத்காரம்.. உபி எம்எல்ஏக்களில் 51% பேர் மீது கிரிமினல் வழக்குகள்.. தலைசுற்ற வைக்கும் தகவல்!
லக்னோ: சமீபத்தில் நடந்த தேர்தலில் 18வது உத்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டாவது எம்எல்ஏவும் பாலியல் பாலாத்காரம் உள்ளிட்ட குற்றப் பின்னணி கொண்டவர்கள் என, அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து கடந்த 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன
வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் முன்னிலையும் சுமார் 270க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.

உத்திரபிரதேசம் சட்டசபை தேர்தல்
இதேபோல் பஞ்சாப் தவிர மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று உபி முதல்வராக யோகி ஆதித்யநாத், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அரசியலை தீர்மானிக்கும் உத்தரப்பிரதேசம் ஒரு முக்கியமான மாநிலம் ஆகும்.

பாஜக வெற்றி
உ.பி.யில் வெற்றி பெற்றவர் இந்தியாவை வெல்வார் என்று அடிக்கடி சொல்லப்படுவது வழக்கம். அந்த அளவுக்கு உபி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தல் மட்டுமல்லாமல் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை உத்திர பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாஜக, தொடர்ந்து 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 312 இடங்களை வென்றது. இதேபோல சமாஜ்வாதி, பகுஜன் சாமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் குறிப்பிடத்தகுந்த இடங்களில் வென்றுள்ளது.

பலாத்காரம் குற்றம்
158 வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 39% பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளனர். ADR இன் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை வழக்கும், 29 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 6 பேர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிக எண்ணிக்கை
பிஜேபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 255 எம்எல்ஏக்களில் 90 பேர் (35%) கடுமையான கிரிமினல் வழக்குகளைக் கொண்டுள்ளனர் என்றும், அதைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் 111 எம்.எல்.ஏ.க்களில் 48 பேர் அதாவது, 43 சதவீதமும், ஆர்எல்டியைச் சேர்ந்த எட்டு பேரில் ஐந்து பேரும், சுஹேல்தேவின் ஆறு பேரில் நான்கு பேர் குற்ற பின்னணி கொண்டர்வகள் என்றும் தரவு காட்டுகிறது. இதேபோல் பாரதிய சமாஜ் கட்சி, நிஷாத் கட்சியில் நான்கு பேர், அப்னா தளம் (சோனேலால்) கட்சியில் இருவரும், ஜனசத்தா ஜன்சத்தா தளம் லோக்தந்திரிக் மற்றும் காங்கிரஸிலிருந்து தலா இருவர், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் குற்றபின்னணி கொண்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications