அதிர்ந்த ஆக்ரா.. குபுகுபுவென எரிந்த ரயில்! முழுமையாக கருகிய 2 பெட்டிகள் - பயணிகள் நிலை என்ன?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பாதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் - மத்திய பிரதேச மாநிலம் சியோனி ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் பாதால்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பதாய் ரயில் நிலையத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 2 ரயில் பெட்டிகள் முழுமையாக தீயில் கருகி நாசமாகியுள்ளன.

ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். இதில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் பாதால்கோட் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே விளக்கம் கொடுத்து உள்ளது.
At around 3:30 pm, two general coaches of Patalkot Express (14624) caught fire between #Agra Cantt & Bhandai junction station. No casualty as if now.#IndianRailway #UttarPradesh pic.twitter.com/ROmw8RIX1d
— Arvind Chauhan 💮🛡️ (@Arv_Ind_Chauhan) October 25, 2023
அதில், "ஆக்ரா - தோல்பூர் இடையே சென்று கொண்டு இருந்த பாதால்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் இருந்து புகை வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரயில் எஞ்சினில் இருந்து 4 வதாக இருக்கும் ஜிஎஸ் பெட்டியில் இருந்து புகை வந்தது தெரிந்தது. உடனடியாக அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டு தீ விபத்து ஏற்பட்ட கோச் மற்ற பெட்டிகளைவிட்டு பிரிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
3.45 மணியளவில் ஆக்ரா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்றபோது லேசாக தீ விபத்து ஏற்படத் தொடங்கியது. தற்போது ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை." என்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரயில் தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டில் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்து சம்பவம் பயணிகளை பீதி அடைய வைத்து உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications