பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக மாறிய.. உத்தர பிரதேச ஆதிக்க சாதிகள்.. கோட்டையிலேயே விழுந்த ஓட்டை.. போச்சு
லக்னோ: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை கவலைக்குரியதாக மாறி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்து வாக்குகளால் பெரும்பான்மை இடங்களை வென்ற மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை மோசமாக மாறி உள்ளது.
இப்பகுதியில் இப்போது சூழ்நிலைகள் வேகமாக மாறி வருகின்றன. சில ஆதிக்க சாதியினர் அங்கே பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகக் காட்டி பாஜகவிற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

ராஜபுத்திரர்கள், தியாகிகள் மற்றும் சைனிகள் உட்பட இந்த ஆதிக்க சாதியினர் மேற்கு உத்தரபிரதேசத்தில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
என்ன நடக்குது? கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள ராஜபுத்திரர்கள் எனப்படும் ராஜ்புத் சாதியினரின் மகாபஞ்சாயத்தில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பேசப்பட்டு உள்ளதாம்.
டிக்கெட்டுகளுக்காக பாரதிய ஜனதா கட்சியால் (பிஜேபி) புறக்கணிக்கப்பட்டதால் சமூக உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தங்கள் ஏமாற்றத்தை வாய்மொழியாக வெளிப்படுத்தினர். இதனால் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் பேசப்பட்டு உள்ளதாம்.
மேற்கு உ.பி.யின் மீரட் மண்டலத்தில் உள்ள ஏழு இடங்களுக்கு, அந்த சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை கட்சி நிறுத்தாததால், பாஜகவுக்கு பொதுவாக வாக்களிக்கும் ராஜ்புத் சமூகம் வருத்தம் அடைந்துள்ளது. மொராதாபாத் மண்டலத்தில் உள்ள ஏழு இடங்களில் ராஜ்புத் சமூகம் அதிக பிரதிநிதித்துவம் கொண்டது. ஆனால் அங்கே அவர்கள் வாய்ப்பு பெறவில்லை. இதன் காரணமாக அந்த சமுதாயத்தினர் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர்.
ராஜபுத்திரர்கள் மட்டுமின்றி தியாகிகள் மற்றும் சைனிகள் உட்பட இந்த ஆதிக்க சாதியினர் மேற்கு உத்தரபிரதேசத்தில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
ஏப்ரல் 7ஆம் தேதி, சஹாரன்பூரில் ராஜபுத்திரர்கள் மாபெரும் மகாபஞ்சாயத்தை நடத்தினர், இது பாஜகவிற்குள் குழப்பத்தை உருவாக்கியது. மேற்கு உத்தரபிரதேசத்தில் கணிசமான மக்கள்தொகை கொண்டவர்கள் இவர்களின் ஜாதிகள்தான். இவர்களின் 10 சதவீதம்தான் இங்கே முடிவுகளை தீர்மானிக்கும் ஒன்று.
கோரிக்கை என்ன?: இந்த சாதி அமைப்புகள் பாஜக மற்றும் காங்கிரஸிடம் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை களமிறக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. இதை பாஜக கேட்காத காரணத்தால் அவர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் மீரட் மண்டலத்தில் உள்ள ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெறுவதற்கு அவர்களின் ஆதரவு எவ்வாறு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டி ராஜ்புத்திர சமூகம் பாஜக கட்சியிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. நிச்சயமாக, மொராதாபாத் மண்டலத்தில் உள்ள 7 இடங்களில் பாஜக என்று இல்லை எந்த கட்சியாலும் ராஜ்புத் ஆதரவு இன்றி வெற்றிபெற முடியாது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சியின் வலிமைமிக்க கூட்டணி அமைத்த போது கூட கடந்த முறை இங்கே ராஜ்புத் ஆதரவு இன்றி அவர்கள் வெற்றிபெற முடியவில்லை.
இவர்களின் வாக்குகள் ஜாதிவாரியாகப் பிரிக்கப்பட்டால் தொகுதிவாரி வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாகப் போகாது. மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சாதி பார்முலா வரவிருக்கும் தேர்தல்களில் பாஜகவுக்கு எப்படி தொந்தரவாக இருக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
சஹாரன்பூர்
சாதி பார்முலா
முஸ்லிம்கள்: 42 சதவீதம்
ஜாதவ்: 17 சதவீதம்
ராஜ்புத்: 8 சதவீதம்
சைனி: 5 சதவீதம்
குஜ்ஜார்: 5 சதவீதம்
காஷ்யப்/கோஹர்: 4 சதவீதம்
பிராமணர்: 2.5 சதவீதம்
பஞ்சாபி + பனியா: 8 சதவீதம்
தியாகி: 2.5 சதவீதம்
ஜாட்: 1.5 சதவீதம்
இதில் மொத்தமாக 55 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு எதிராக உள்ளன.
அதாவது முஸ்லிம்கள்: 42 சதவீதம்
தியாகி: 2.5 சதவீதம்
ஜாட்: 1.5 சதவீதம்
ராஜ்புத்: 8 சதவீதம்
சைனி: 5 சதவீதம் வாக்குகள் பாஜகவிற்கு எதிராக உள்ளன.
கடும் எதிர்ப்பு: ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக, அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மனம் முடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.
மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்கு எதிராக குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக 'சத்திரிய' சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் நேற்று 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.
பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நானௌடா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்திரிய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் சத்திரியர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.
வடஇந்திய பஞ்சாயத்துகளில் எடுக்கப்படும் முடிவுகள், அதில் கலந்து கொள்ளும் எல்லோராலும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்பதால் பாஜகவிற்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications