விண்வெளியில் இருந்து பார்த்தால் மகா கும்பமேளா இடம் எப்படி இருக்கு பாருங்க? சேட்டிலைட் போட்டோ
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இந்த கும்பமேளாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி வரும் நிலையில் மகா கும்பமேளா நடக்கும் இடம் விண்வெளியில் இருந்து பார்த்தால் எப்படி உள்ளது? என்பது தொடர்பான போட்டோவை இஸ்ரோ சாட்டிலைட் படம் பிடித்துள்ளது.
நம் நாட்டில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா என்பது நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கொண்டாடப்படும். பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றாக இணையும் திரிவேணி சங்கமத்தில் தான் இந்த கும்பமேளா நடத்தப்படும்.

அந்த வகையில் தற்போது மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி இந்த விழா தொடங்கியது. பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் இந்த கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த 45 நாளில் 40 கோடி பேர் வரை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது திரிவேணி சங்கமத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வந்து புனித நீராடி செல்கின்றனர். கும்பமேளாவுக்கான பணியை உத்தர பிரதேச அரசு செய்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு உள்பட பிற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கும்பமேளா நடக்கும் இடமே மொத்தமாக மாறி உள்ளது. எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதற்கிடையே தான் கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமம் இதற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது எப்படி உள்ளது? என்பது தொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளது. இந்த போட்டோக்கள் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்ரோவின் சாட்டிலைட்கள் சமீபத்தில் படம்பிடித்த திரிவேணி சங்கமத்தின் போட்டோக்கள் ஒப்பிட்டு காட்டப்பட்டுள்ளன.
அதன்படி 2024 ஏப்ரல் மாதம் 6 ம் தேதி, டிசம்பர் 22ம் தேதி, 2025ம் ஆண்டு ஜனவரி 10 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த செய்தியில் உள்ள முதலில் காட்டப்படும் போட்டோ என்பது பிரக்யாராஜ் பரேட் மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 2வது படம் என்பது புதிய சிவாலய பார்க்கின் படமாகும். 3வது படமும் கும்பமேளா நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா வரைபடம் மாதிரியை காட்டுகிறது.

இதில் ஏப்ரல் 6ம் தேதி படம் என்பது கும்பமேளா ஏற்பாடுகள் செய்யப்படாததை காட்டும். டிசம்பர் 22ம் தேதி என்பது கும்பமேளாவுக்காக எடுக்கப்பட்ட பணிகளை குறிக்கும். அதேபோல், ஜனவரி 10ம் தேதி எடுக்கப்பட்ட போட்டோ என்பது ஏற்பாடுகள் முடியும்போது எடுப்பதை காட்டும் வகையில் உள்ளன.
இந்த மகா கும்பமேளாவையொட்டி 1.50 லட்சம் டெண்ட் அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் சமைல்கூடம் அமைக்கப்பட்டுள்ளளது. 99 இடங்களில் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை 3 போட்டோக்களிலும் ஜனவரி 10ம் தேதி எடுக்க இமேஜை பார்த்தால் நன்கு தெரியும்.
நம்நாட்டை பொறுத்தவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடக்கும். மகா கும்பமேளா என்பது மொத்தம் 4 இடங்களில் சுழற்சி முறையில் நடத்தப்படும். அதாவது ஜார்கண்ட் மாநிலம் ஹரித்வார், மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன், மகாராஷ்டிராவில் கோதாவரி மற்றும் உத்தர பிரதேசத்தில் பிரக்யாராஜ் உள்ளிட்ட இடங்களில் மகா கும்பமேளா நடத்தப்படும். அந்த வகையில் இந்த முறை மகா கும்பமேளா பிரக்யாராஜில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications