'யோகி ஆதித்யநாத்' - உத்தரப்பிரதேசத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக மீண்டும் அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார் யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேசத்தில் ராஜ்நாத் சிங் முதல்வராக இருந்ததற்கு பிறகு, பாஜக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் அமரவில்லை. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளின் ஆதிக்கம் உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்திருந்தது.

மாநில கட்சிகளின் ஆதிக்கத்தால், தேசிய கட்சியான பாஜகவால் உத்தரப்பிரதேசத்தில் ஈடுகொடுக்கமுடியவில்லை. இதனால் தொடர்ந்து பாஜக போராடி வந்தது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் மாறி மாறி உத்தரப்பிரதேசத்தை ஆட்சி செய்து வந்தனர். முலாயம் சிங்குக்குப் பிறகு அவரது மகன் அகிலேஷ் யாதவ் கட்சியைக் கையில் எடுத்து சமாஜ்வாதிக்கு வெற்றியைக் கொண்டு வந்தார். அந்த வெற்றி சமாஜ்வாதிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துத் தந்தது. அதைவைத்து சமாஜ்வாதி அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு ஜாதி கட்சி என்ற அளவிலேயே சுருங்கிவிட்டனர்.

சமாஜ்வாதி

சமாஜ்வாதி

சமாஜ்வாதி கட்சிக்கு அடித்தளமாக இருந்தது, யாதவர்களின் ஓட்டு. உத்தரப்பிரதேசத்தில் அதிகம் இருப்பது ஓபிசி பிரிவினர். இதனால் பல ஓபிசி தலைவர்களும் அகிலேஷ் யாதவோடு கைகோர்த்தனர். அதே நேரம் மாயாவதி தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக முன்னிறுத்தினார். தலித் மக்கள், முஸ்லிம்களுக்கான விடியலாக பார்க்கப்பட்டார். இதனால் இவர்கள் இருவருமே குறிப்பிட்ட ஜாதியை மையப்படுத்தும் தலைவர்களாகவே பார்க்கப்பட்டார்கள்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

மிகப்பெரிய வெற்றி, அதிகாரம் இதெல்லாம் அகிலேஷ் யாதவ் கண்களை மறைத்துவிட்டது. உத்தரப்பிரதேசம் என்றால் வன்முறை, அடிதடி, எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலம் என்ற நிலை உருவாகி இருந்தது. இதை மாற்ற அகிலேஷ் யாதவ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குடும்பத்துக்கு அதிகாரம் கொடுப்பது, அவர்களை ஆட்சியில் அமரவைப்பது என்று தன் குடும்பத்தை மட்டுமே கவனித்ததால், மக்களுக்கு அகிலேஷ் யாதவ் மீது வெறுப்பு வரத்தொடங்கியது. அதை இன்னும் அதிகரிக்கும் விதமாகவே அகிலேஷ் யாதவின் நடவடிக்கைகளும் இருந்தன.

பாஜக‌

பாஜக‌

இதை தவறவிடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. மத்தியிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்திருந்தது. காங்கிரஸ் மிக மோசமாக தோற்றிருந்தது. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தைக் கைப்பற்ற திட்டம் தீட்டியது பாஜக. அதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்கியது. மக்கள் விரும்பும் ஒருவரை தலைவராக கொண்டுவர வேண்டும். அவர்மீது பெரிய அதிருப்தியோ, வெறுப்போ இல்லாதவராக இருக்க வேண்டும் என பாஜக நினைத்தது.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

1998 முதல் தொடர்ச்சியாக கோரக்பூரி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மக்களுக்கும் அவர்மீது எந்த குறைகளும் இல்லை என்ற பெயர் பெற்றவர், ஆன்மீகவாதி, மடத்தின் தலைவர் இதெல்லாம் மக்களுக்கு அவர்மீது மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. அப்படி ஒருவரை தலைவராக கொண்டுவந்தது பாஜக. காவி வேட்டி, துண்டு, சட்டை, மொட்டைத்தலை என்ற அடையாளத்துடன் 'ஹைலைட்' ஆக்கப்பட்டார் யோகி ஆதித்யநாத். இந்துத்வா தான் கொள்கை என்று கட்டமைத்து மாநில அரசியலில் மாற்றம் கொண்டுவர களமிறங்கினார்.

இந்துத்வா

இந்துத்வா

ராமர் கோயில் கட்டப்படும், காசி கோயில் புணரமைக்கப்படும் என்று கோயில் குறித்தும், இந்து மதம் குறித்தும் பிரசாரம் செய்து மக்களை சந்தித்தார் யோகி ஆதித்யநாத். மிகப்பெரிய அளவில் மக்கள் அதிருப்தியில் இருந்ததால், மாற்றத்துக்கு தயாராக இருந்தனர். இந்துத்வ வார்த்திகளில் பாஜக பக்கம் சாய்ந்தது மக்கள் அலை. அதற்கடுத்து நடந்த தேர்தலில் உத்தரப்பிரதேசம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டது.

2017 தேர்தல்

2017 தேர்தல்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 312 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. ஆளும்கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சி வெறும் 47 இடங்களில் மட்டுமே வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 19 இடத்திலும், காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்குவந்தது. அதன்பிறகு ஒவ்வொரு முறையும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அலை அடிக்க ஆரம்பித்தது.

2019 நாடாளுமன்ற தேர்தல்

2019 நாடாளுமன்ற தேர்தல்

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி உத்தரப்பிரதேசத்தைக் கைப்பற்றவே நினைக்கும். பாஜகவும் அதையே நினைத்து தான் தேர்தலை சந்தித்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியாக இருந்த அப்னா தள் இணைந்து மொத்தம் 62 இடங்களில் வென்றது. மீண்டும் மக்கள் பாஜக பக்கமே இருந்தனர்.

யோகி எனும் தலைவன்

யோகி எனும் தலைவன்

உத்தரப்பிரதேச மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வெறும் முதல்வர் மட்டும் இல்லை. அவரை இந்துத்வத்தின் தலைவராகவே பார்த்தனர். பிரதமர் மோடிக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தின் மக்கள் அதிகம் மதிக்கும் தலைவராகவே இருந்தவர் யோகி ஆதித்யநாத். கடந்த ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் அதிக பிரச்சனைகளை சந்தித்தார். அதை யோகி ஆதித்யநாத் கையாண்ட விதம் பாஜகவை யாராலும் தகர்க்க முடியாது என்ற நினைப்பை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறார். சமாஜ்வாதி மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதியையும் மொத்தமாக காலி செய்திருக்கிறது பாஜக. இதுதான் யோகியின் சாதனையாக பார்க்கப்படுகிறது. அதுதான் யோகியை தலைவராக கொண்டுபோனது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+