Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்திக் அகமது கொலை.. ரவுடியின் சகோதரி பக்கம் திரும்பிய உபி போலீசார்! தீவிர தேடுதல் வேட்டை! பதற்றம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்த அத்திக் அகமது சமீபத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதற்கிடையே இப்போது போலீசாருக்கு அவரது சகோதரி மீது கவனம் திரும்பியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் போலீசார் கஸ்டடியில் இருந்த பிரபல தாதா அத்திக் அகமது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஊடகத்தினர் முன்னிலையில் இந்த கொடூர கொலை அரங்கேறியது.

Hunt for slain gangster Atiq Ahmed’s sister Ayesha Noori intensifies

உத்தரப் பிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்தவர் அத்திக் அகமது. இவர் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் எம்பி எம்எல்ஏவாகவும் இருந்தார். இவர் தான் சில நாட்களுக்கு முன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசம்: மற்றொரு வழக்கில் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதும் சிறையில் இருந்தார். இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு வந்த போது தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. செய்தியாளர்கள் போல இருந்த மூன்று பேர் அவர்கள் இருவரையும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். இது உத்தரப் பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் சாடினர்.

மேலும், இதனால் உத்தரப் பிரதேசத்தில் உடனடியாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. தாங்கள் பிரபலமாக வேண்டும் என்றே இந்த கொலையைச் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 3 பேர் ஷாக் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர். இதனிடையே போலீசாரின் கவனம் இப்போது அத்திக் அகமதின் சகோதரி ஆயிஷா நூரி பக்கம் திரும்பியுள்ளது. வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை ஆயிஷா நூரியும் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கு: உமேஷ் பால் கொலை வழக்கில் இவர்களது பெயரைக் குற்றவாளியாக உபி போலீசார் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சேர்த்தனர். அப்போது முதலே ஆயிஷே நூரி அவரது தாயுடன் தலைமறைவாக உள்ளார். அத்திக் அகமதிற்கு மொத்தம் 4 சகோதரிகள் இருக்கும் நிலையில், அவர்களில் ஒருவரான ஆயிஷா ரவுடி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரயாக்ராஜில் உள்ள அதிக் அகமதுவின் சகோதரி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்

இவரது கணவர் டாக்டர் அக்லக் அகமது. மீருட்டைச் சேர்ந்த அரசு மருத்துவரான அக்லக்கை கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதிதான் உபி சிறப்பு அதிரடிப் படை கைது செய்திருந்தனர்.

குஜராத்தின் சபர்மதி சிறையிலிருந்து பிரயாக்ராஜுக்கு அத்திக் அகமதை அழைத்துச் சென்றனர். ஆயிஷா அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது தான் ஆயிஷா மீது போலீசார் பார்வை திரும்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+