லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் ஒரு பெண்.. என்னால் போராட முடியும்".. யோகியின் கோட்டையில் கர்ஜித்த பிரியங்கா

பெண்களுக்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரியங்கா தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: "நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்" என்று உபி முதல்வர் யோகியின் கோட்டைக்குள் புகுந்து பிரியங்கா காந்தி பேசிய பேச்சு, இந்திய அரசியலில் மிகுந்த ஈர்ப்பை பெற்று வருகிறது.
இன்னும் சில மாதங்களில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது.. இதில், மிகப்பெரிய மாநிலமான 403 சட்டசபை தொகுதிகளைக்கொண்ட உத்தரபிரதேச தேர்தல் பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு வருகிறது.

இங்கு 2017-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 312 இடங்களில் வெற்றிவாகை சூடியது.. ஆனால் காங்கிரஸ் கட்சியோ வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.

தீபாவளி நேரத்தில் இது சரியா.. கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கிறதா?.. ராகுல் காந்தி கேள்வி தீபாவளி நேரத்தில் இது சரியா.. கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கிறதா?.. ராகுல் காந்தி கேள்வி

பாஜக

பாஜக

இதற்கு பிறகு, 2019-ல் நடந்த எம்பி தேர்தலில், மொத்தமுள்ள 80 இடங்களில், பாஜக 62 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது... இனியும் இதே நிலைமை தொடர்ந்தால், உபியில் காங்கிரஸ் மேலும் அதள பாதாளத்துக்கு சென்றுவிடும் என்பதால்தான், அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்...

விவசாயிகள்

விவசாயிகள்

இதற்கு பிறகு பிரியங்காவின் அரசியல் வேகமெடுத்தது.. சுற்று சுற்றி மக்களை நெருங்கி அவர்களின் கவனத்தை ஈர்த்தார்.. லக்கிம்பூர் கேரியில் நடந்த மோதலில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா கைது செய்யப்பட்டு விருந்தினர் மாளிகையில் அடைக்கப்பட்டதும், அங்கே கீழே கிடந்த குப்பைகளை, அவரே துடைப்பம் கொண்டு அகற்றியதும் மக்களுடைய கவனத்தை ஈர்த்தது... வீடியோக்களும் வைரலாகின.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு யுக்தியை பிரியங்கா கையில் எடுத்துள்ளார்.. அதன்படி,பெண்களின் வாக்குகளை கவர பல்வேறு அதிரடிகளை அறிவித்து வருகிறார்.. கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் 40 சதவீதம் பேர் பெண்களாகவே இருப்பார்கள்" என்ற முதல் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு பிறகு, உபியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பிளஸ்-2 படித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன், பட்டதாரி பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார்.

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அதுமட்டுமல்ல, வருடந்தோறும் பெண்களுக்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று நேற்று முன்தினம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.. பிரியங்காவின் ஒவ்வொரு அறிவிப்புகளும், பெண்களின் வாக்குகளை கவரும்படியாக அமைந்து வருவது பாஜகவை திகைத்து பார்க்க வைத்து வருகிறது.

கூடாரம்

கூடாரம்

இதனிடையே கோரக்பூரில் பிரியங்கா பேசிய பேச்சு, பாஜக கூடாரத்தையே அசைத்து பார்த்து வருகிறது.. "நான் என் சகோதரிகளிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக காங்கிரஸ் போராடும்... உங்கள் போராட்டத்தை எதிர்த்து போராட உங்களுக்கு அதிகாரம் கொடுக்க விரும்புகிறேன். 40 சதவீத பெண்கள் அரசியலுக்கு வந்தால், அவர்கள் வருவார்கள்.

பெண்கள்

பெண்கள்

அரசியலின் முகத்தை மாற்ற வேண்டும்" என்று கர்ஜித்தது பாஜகவுக்கு செக் வைக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் 40 ஆயிரம் பேரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் திரண்டிருந்தது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உபியில் சமீப காலங்களாகவே பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது..

பாஜக

பாஜக

கொரோனா தொற்றை கையாண்ட விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.. இதற்கு நடுவில் விவசாயிகளின் எதிர்ப்பையும் ஆளும் பாஜக சம்பாதித்து கொண்டுள்ளது.. இவைகளை எல்லாம் கடந்த பாஜக, மக்களின் நன்மதிப்பை பெறுமா? பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளை காங்கிரஸ் வீழ்த்துமா? தரப்பட்ட வாய்ப்புகளை எல்லாம் ராகுல் காந்தி இழந்தநிலையில், பிரியங்கா அதை மீட்டெடுப்பாரா? என்ற எதிர்பார்ப்புகளும் கிளம்பி உள்ளன.

English summary
"I'm A Woman, Can Fight", Priyanka Gandhi Vadra's Bid To Revive Congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X