லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊழலை அம்பலப்படுத்தியதற்கு பரிசு... உ.பி.யில் பத்திரிகையாளர் எரித்துக்கொலை!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர், அவரது நண்பர் எரித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

journalist

உத்தரபிரதேச மாநிலம் பால்ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் சிங்(37). லக்னோவை தலையிடமாக கொண்ட ராஷ்ட்ரிய சுவாரப் என்ற இந்தி பத்திரிகையில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் பிந்து சாகு(34 ) அவருடன் தங்கி இருந்தார்.

கடந்த வாரம் இவர்கள் இருவரும் வீட்டில் தீப்பிடித்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அனால் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

முதலில் தீ விபத்து காரணமாக இருவரும் இறந்ததாக போலீசார் விசாரித்து வந்தனர். அதன்பின்புதான் பால்ராம்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் மகன் ரிங்கு மிஸ்ரா, அவரது நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து ராகேஷ் சிங், சாதுவை எரித்து கொன்றது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

"அண்ணே கை வைக்காதீங்க".. பெண்ணை அடித்த இந்து முன்னணி நிர்வாகி.. கோவையில் பரபரப்பு!

ராகேஷ் சிங் பஞ்சாயத்து தலைவரும், அவரது மகன் ரிங்கு மிஸ்ரா ஊழல் குறித்தும் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரிங்கு மிஸ்ரா, அவரது நண்பர்கள் ராகேஷ் சிங், சாதுவை சானிடைசர் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். பின்னர் விபத்து நடந்ததுபோல் நாடகமாடி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மருத்துவமனையில் இறப்பதற்கு முன்பு '' உண்மையாக இருந்தால் இந்த பரிசுதான் கிடைக்கும் ஏன் ராகேஷ் சிங் வெளியிட்ட வீடியோ பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

English summary
A journalist who broke the news about a panchayat leader in the state of Uttar Pradesh and his friend were burnt to death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X