கிடுகிடுத்த உ.பி. பாஜக.. ஒரே நாளில் 60 மாவட்ட தலைவர்கள் தூக்கி அடிப்பு- லோக்சபா தேர்தல் வியூகமாம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 60 மாவட்ட தலைவர்களை தூக்கிடி அடித்துள்ளது பாஜக. அத்துடன் மாநில நிர்வாகிகள் பலரையும் மாவட்ட தலைவர்களாக களமிறக்கி இருக்கிறது பாஜக
நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்டது உத்தரப்பிரதேச மாநிலம். இம்மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. பாஜக ஆளும் உ.பி.யில் 2019 தேர்தலில் அக்கட்சி 62 இடங்களைக் கைப்பற்றியது. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி மொத்தம் 15 இடங்களில் வென்றது. பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தள்(எஸ்) 2, காங்கிரஸ் 1-ல் வென்றது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு சில இடங்கள் குறைவுதான்.

இம்முறை மொத்தம் உள்ள 80 தொகுதிகளையும் இலக்கு வைத்து களமிறங்கி இருக்கிறது பாஜக. ஆனால் எதிர்க்கட்சிகளோ "இந்தியா" கூட்டணி என்ற பெயரில் "பொதுவேட்பாளர்" பார்முலாவை கையில் எடுப்பதால் பாஜக நினைப்பது போல சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது என்பது யதார்த்தம். உ.பி.யில் தற்போது முடிவடைந்த கோசி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலே இதற்கு சாட்சி. "இந்தியா" கூட்டணியின் பொது வேட்பாளர் பார்முலாவிடம் பாஜக வீழ்ந்தது.
இதனால் பதற்றமடைந்துள்ள பாஜக உ.பி.யில் தமது வெற்றியை வலுவானதாக்கிக் கொள்ள அதிரடியில் இறங்கி இருக்கிறது. இதன் முதல் கட்டமாக ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 60 மாவட்ட தலைவர்களை பாஜக தூக்கி அடித்துள்ளது. ஜாதி அடிப்படையில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு மாநில நிர்வாகிகளை தலைவர்களாக பாஜக களமிறக்கியிருப்பதன் மூலம் எவ்வளவு தீவிரமாக அக்கட்சி இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் சென்ற தேர்தலில் வென்ற தொகுதிகளில் வலிமையான சக்திகளை மாவட்ட தலைவர்களாக்கி இருக்கிறது பாஜக.
தேர்தல் ஜூரம்!
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications