‛பாஜகவை அசைக்க முடியாது’.. உத்தர பிரதேசத்தில் காலியாகும் ‛இந்தியா’ கூட்டணி.. நியூஸ் 18 சர்வே முடிவு
லக்னோ: ‛இந்தியா' கூட்டணியாக காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும் கூட வரும் லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை அசைக்க முடியாது எனவும், அந்த மாநிலத்தில் கட்சிகள் வெல்லும் இடங்கள் தொடர்பான கருத்து கணிப்பு முடிவை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்டுள்ள மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு தற்போது பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யாத் உள்ளது. உத்தர பிரதேசத்தில் மட்டும் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியால் எளிதாக மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும்.

இதனால் தான் ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போதும் உத்தர பிரதேச மாநிலம் என்பது அதிக கவனம் பெறும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 62 தொகுதிகளில் வென்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், பாஜகவின் கூட்டணி கட்சி ஏடிஎஸ் 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி ரேபரேலியில் வென்ற நிலையில் ராகுல் காந்தி கூட அமேதியில் தோற்றார்.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் ‛இந்தியா' கூட்டணியில் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஒன்றாக இணைந்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் பாஜக சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக உத்தர பிரதேசத்தில் நியூஸ் 18 சிஎன்என் சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்தாலும் கூட உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு தடைப்போட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகளில் பாஜக 77 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக காங்கிரஸ் + சமாஜ்வாதியின் ‛இந்தியா' கூட்டணி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். அதோடு காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இந்த கருத்து கணிப்பு முடிவு என்பது அதிர்ச்சியளித்துள்ளது.
இந்த நியூஸ் 18 சிஎன்என் கருத்து கணிப்பு என்பது இந்தியாவில் 21 மாநிலங்களில் உள்ள 518 லோக்சபா தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 சட்டசபை தொகுதிகளை சேர்ந்தவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டனர். மொத்தம் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications