உ.பி.யில் காங்கிரஸ் அடாவடி சேட்டை.. அகிலேஷை சீண்ட மாயாவதி கட்சியை கூட்டணிக்கு அழைக்கிறதாம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனான தொகுதி பங்கீடு விவகாரத்தில் திடீரென எழுந்த சிக்கலால் தற்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை "இந்தியா" கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறதாம் காங்கிரஸ்.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தியா கூட்டணியில் பாஜகவை எதிர்க்கும் மாநில கட்சிகளுடன் காங்கிரஸும் இடம் பெற்றிருக்கிறது.

 Lok Sabha Election 2024: Congress invites Mayawatis Party for I.N.D.I.A. bloc

சிதறிய இந்தியா கூட்டணி: ஆனால் லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் சுமூகமான உடன்பாடு செய்து கொள்ளவில்லை. இதனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அறிவித்தார். அதேபோல பஞ்சாப், டெல்லி மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். லோக்சபா தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலும் நடைபெறக் கூடும் என்ற நிலையில் காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என தேசிய மாநாட்டுக் கட்சி அறிவித்துள்ளது.

ராகுல், அகிலேஷ்: இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகளிடையே தொடக்கத்தில் சுமூகமாக தொகுதி உடன்பாடு உருவானது. காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் தர முடியும் என்ற நிலையில் இருந்து அகிலேஷ் யாதவ் இறங்கி வந்து சற்று கவுரமாக 17 தொகுதிகளை ஒதுக்கினார். இதனை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொண்டது. இதனால் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டார்.

எங்க தொகுதியை கேட்பதா?: ஆனால் தற்போது ராகுல் காந்தி யாத்திரையில் இருந்து அகிலேஷ் விலகி நிற்கிறார். இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சி மொரதாபாத், பிஜ்னூர், பால்லியா ஆகிய 3 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கிறது. ஆனால் இந்த 3 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வலிமையாக இருக்கிறது. அப்படியான நிலையில் காங்கிரஸுக்கு எப்படி நாங்கள் விட்டுக் கொடுக்க முடியும்? என்கின்றனர்.

காங்கிரஸ் சொல்வது என்ன? : ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ, மொரதாபாத் உள்ளிட்ட 3 தொகுதிகளை நாங்கள் கேட்டது உண்மைதான். ஆகக் குறைந்தபட்சம் பிஜ்னூர் தொகுதியையாவது சமாஜ்வாதி கட்சி விட்டுக் கொடுத்திருக்கலாம். அந்த தொகுதியில் எங்கள் மாநிலத் தலைவர் அஜய் ராய் போட்டியிட விரும்புகிறார். அதற்காக சமாஜ்வாதி கட்சி இறங்கி வந்திருக்கலாம் என ஆதங்கப்படுகின்றனர்.

அடம்பிடிக்கும் இரு கட்சிகள்: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மொரதாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சிதான் வென்றது. மொரதாபாத் மேயர் தேர்தலில் காங்கிரஸ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இரு கட்சிகளுமே தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக கருதுவதால் மொரதாபாத் உள்ளிட்ட தொகுதிகளுக்காக இரு கட்சிகளுமே முட்டி மோதுகின்றன. இதனால் உத்தரப்பிரதேசத்திலும் இந்தியா கூட்டணி உடையுமா? அல்லது டெல்லி மேலிடம் தலையிட்டு சுமூக நிலைமையை ஏற்படுத்துமா? என்பது எதிர்பார்ப்பு. காங்கிரஸுடன் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே ராகுலின் யாத்திரையில் மீண்டும் அகிலேஷ் இணைவார் என்பது சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு.

திடீர் திருப்பம்: இருப்பினும் அகிலேஷ் யாதவை சீண்டிப் பார்க்கும் வகையில், "இந்தியா" கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இணைய அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறதாம் உ.பி. காங்கிரஸ். சமாஜ்வாதி கட்சி, கூட்டணியை விட்டு வெளியேறினால் மாயாவதி கட்சி மூலம் தலித் வாக்குகள் மொத்தமாக கணக்கு கிடைக்கும் என கனவு காண்பதால் காங்கிரஸ் இந்த அழைப்பை விடுத்து வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+